ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

டாஸ்க் பாரில், வலது ஓரத்தில், கடிகாரத்திற்கு அருகாமையில் காட்டப்படும் ஐகான்களை நான் நீக்க

இந்த ஐகான்களை சிஸ்டம் ஐகான்கள் என்று அழைக்க வேண்டும். அதனால், இந்த பகுதி சிஸ்டம் ட்ரே (System Tray) என அழைக்கப்படுகிறது. நாம் அவற்றை அழிக்க முடியாது. மறைத்து வைக்கலாம். சிஸ்டம் ஐகான்கள் முழுவதையும் கூட நீங்கள் மறைத்து வைக்கலாம்.



உங்கள் ஸ்டார்ட் மெனுவில் தேடல் கட்டம் செல்லவும்.

விண்டோஸ் 8 என்றால் சார்ம் பார் செல்லவும்.

பின்னர், “Turn system Icons on or off” என டைப் செய்திடவும்.

கிடைக்கும் தேடல் முடிவுகளில், முதலாவதாகக் காட்டப்படுவதில் கிளிக் செய்திடவும்.

இப்போது Taskbar and Start Menu ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ திறக்கப்படும்.

இதில் customize என்பதில் கிளிக் செய்திடவும்.

இன்னொரு விண்டோ காட்டப்படும். கீழாக Turn System Icons on or off என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு ஐகான்கள் காட்டப்படும்.

அவை ஒவ்வொன்றின் அருகேயும், ஐகான் காட்டப்பட வேண்டுமா, இல்லையா என்பதற்கான ஆப்ஷன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பாத ஐகான்கள் காட்டப்படுவதனை இதன் மூலம் மறைக்கலாம்.

இங்கு சம்பந்தப்பட்ட செயலிக்கான நோட்டிபிகேஷன்கள் வேண்டுமா என்பதனையும் தீர்மானிக்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல