செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

எக்ஸெல் டிப்ஸ்... குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட...

குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட: சில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம்.



நாம் தயாரித்த ஒர்க் ஷீட் ஒவ்வொன்றும் ஒரே தாளில் அச்சிட முடியும் என்றால், இந்த பிரச்னைக்குத் தீர்வினை எளிதாக மேற்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்த பக்கங்களை அச்செடுக்க வேண்டுமோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, பக்கங்கள் 4,8,10 அச்சடிக்க வேண்டும் என்றால், முதலில் ஒர்க் ஷீட் 4 தேர்ந்தெடுத்து, பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஒர்க் ஷீட் 8, பின் 10 எனத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், நாம் அச்சிடுகையில், இந்த பக்கங்கள் மட்டுமே அச்சாகும்.

இதற்குப் பதிலாக, ஒரே ஒர்க் ஷீட்டில் உள்ள வெவ்வேறு பக்கங்களை அச்செடுக்க வேண்டுமெனில், சற்று சிக்கலான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். அச்செடுக்க விரும் பாத பக்கங்களை மறைத்து (hide) வைத்து, பின் மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுப்பதாகும். இன்னொரு எளிய வழியையும் இங்கு பார்க்கலாம்.

1. ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க்ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும்.

3. இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

6. தொடர்ந்து, கண்ட்ரோல் -+ பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.

7. எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

8. ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.

F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.

F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.

F9 +ALT+SHIFT : திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.

F10 +ALT+SHIFT : ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.

F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.

F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல