Photograph provided by Bill and Jadwiga Smith விடுமுறையில் காலத்தில் இருவரும்
போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புரீதியில் தொடர்பில் இருந்தார் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா அம்மையருடன் போப் இரண்டாம் ஜான் பால்
அவ்வகையில் நூற்றுக்கணக்கான கடிதங்களை கண்டுபிடித்துள்ள பிபிசி, அந்தக் கடிதங்கள் மூலம் அவருக்கு அந்தப் பெண்மணியுடன் நட்புரீதியிலான தொடர்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன எனக் கூறுகிறது.
தத்துவ அறிஞரான போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா
டிமெய்னியென்காவுக்கு போப் இரண்டாம் ஜான் பால் எழுதியக் கடிதங்கள், போலந்தின் தேசிய நூலகத்தில் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதை பிபிசி கண்டுபிடித்துள்ளது.
From the estate of Anna-Teresa Tymieniecka
Anna-Teresa Tymieniecka at the time she met Cardinal Wojtyla
Anna-Teresa Tymieniecka at the time she met Cardinal Wojtyla
அந்தக் கடிதங்களில் ஆனா-தெரீசாவை அவர் தன்னுடனும் மற்றவர்களுடனும் விடுமுறை மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டு காலங்களில் சேர்ந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் போப்பாக தேர்வு செய்யப்பட்ட பிறகும் தனது நன்பரான அந்தப் பெண்மணிக்கு கடிதங்கள் எழுத நேரம் ஒதுக்கியிருந்தார்.
எனினும் தனது பிரம்மச்சரிய உறுதிமொழியை அவர் மீறினார் எனக் கூறுவதற்கான எவ்வித வெளிப்பாடுகளும் அந்தக் கடிதங்களில் தெரியவில்லை.
போப் இரண்டாம் ஜான் பால் கடந்த 2005அம் ஆண்டு காலமானார்.
BBC Tamil
Lasting friendship: Hundreds of letters and photographs that tell the story of Pope John Paul II's close relationship with a married woman







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக