செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பெண்ணுறுப்பை வலுப்படுத்த உதவும் உணவுகள்

பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள். ஆண்களுக்கு நாற்பது வயதில் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல்நலக் குறைபாடுகள், பெண்களுக்கு முப்பது வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

இவற்றை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை என்றால் அது அவர்களது பெண்ணுறுப்பு சார்ந்தது, மாதவிடாய் மற்றும் கருப்பை வலுவின்மையால் அவர்களுக்கு ஏற்படும் வலி சொல்லி மாளாது.



இவற்றுக்கு மருந்து மாத்திரைகளை நாட வேண்டாம். சில உணவுகளை சரியான அளவு உட்கொள்வதன் மூலமாகவே எளிதாக இதற்கு தீர்வுக்கான முடியும்...

குருதிநெல்லி ஜூஸ்

குருதிநெல்லி ஜூஸில் அமில கலவைகள் உள்ளன, இவை தீய பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டவை. மேலும், சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது.

தயிர்

தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலில் pH அளவை ஆரோக்கியப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ப்ரோ-பயாடிக்ஸ் உடலில் வலிமை அதிகரிக்கவல்லது.

சர்க்கரைவள்ளி கிழங்கு

இதில் வைட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. இது பெண்ணுறுப்பின் வலிமைக்கு தேவையானது. மேலும் கருப்பை சுவர்களுக்கு வலுவளிக்கிறது. மற்றும் உடற்சக்திக்கு தேவையான ஹார்மோன்களை உண்டாக்க இது பயனளிக்கிறது.

பூண்டு

பூண்டு ஓர் சிறந்த நுண்ணுயிர் கொல்லி மற்றும் பெண்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

சோயா

சோயாவில் இருக்கும் பைத்தோஸ்ட்ரெஜன்ஸ் பெண்ணுறுப்பை வறட்சி அல்லது உராய்வு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

ஆப்பிள், தண்ணீர், வெண்ணெய் பழம்

ஆப்பிள், தண்ணீர், வெண்ணெய் பழம், ஆளி விதைகள் போன்றவை உடலுக்கு பல வகைகளில் நன்மை அளிக்க கூடியவை. சோயா பிடிக்காதவர்கள் இவற்றை உண்ணலாம், ஏனெனில் இவையும் இயற்கையாகவே பெண்ணுறுப்பில் உராய்வு தன்மை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

பாதாம் பூசணி விதைகள்

அதிகமான ஜின்க் சத்து உள்ளவை இந்த பாதாம் மற்றும் பூசணி விதைகள், இவை ஹார்மோன்களை தூண்டி மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகின்றன. மேலும், இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.

மிளகாய்

மிளகாய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் உணவாகும். மேலும், இது நரம்பு மண்டலத்தையும் நன்கு செயல்பட தூண்டுகிறது. மற்றும் உணர்சிகளை மேலோங்க செய்வதிலும் சிறந்த உணவாக மிளகாய் இருக்கிறது.

ஆரஞ்சு, கொய்யா, கிவி

இந்த பழங்களில் இருக்கும் வைட்டமின் சி உடல் உறுதியை ஊக்குவிக்கிறது. மேலும் உடலுறவு சார்ந்த வலிமைக்கும் இது நன்கு பயனளிக்கிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்களில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். பெண்கள் இதை அதிகம் உண்ணும் போது, அவர்களிடம் உணர்ச்சியை மேலோங்க வைக்க இது பயன்படுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், மீத்தைலெக்ஸாந்தினஸ், பினைலானைனில் போன்றவை இருக்கின்றன. இவை எல்லாம் உடலில் டோபோமைன் சுரக்க செய்கின்றன, டோபோமைன் உடலுறவு உணர்ச்சியை அதிகரிக்க செய்யும் சுரப்பி ஆகும்.

காய்கறி, பழங்கள்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பிடிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த சமயத்தில் வைட்டமின் மற்றும் தனிம சத்துக்கள் அதிகமாக உள்ள காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல