வியாழன், 18 பிப்ரவரி, 2016

நாள்தோறும் செத்து பிழைக்கிறோம்: கொடுமையான பலாத்காரத்தால் கண்ணீர் வடிக்கும் பெண்

 Nadia Murad is in the UK campaigning to build solidarity with victims of violence in Iraq Reuters

இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று போராடி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, தாங்கள் கடத்தி செல்லும் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
குறிப்பாக ஐஎஸ் அமைப்பு, ஈராக்கில் உள்ள யாஸிதி இனப்பிரிவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அவர்களை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



இந்நிலையில், ஐ.எஸ் பிடியில் இருந்து தப்பிய Nadia Murad(21) என்ற யாஸிதி பெண், தான் சந்தித்த கொடுமைகள் பற்றி மத்திய லண்டன் பகுதியில் உள்ள வர்த்தக காங்கிரஸ் யூனியனில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ஈராக்கில் எனது தாய், தந்தையர் மற்றும் 6 சகோதரர்களுடன் வசித்து வந்தேன், எனது சகோதரர்கள் மற்றும் எனது பெற்றோரை கொலை செய்த தீவிரவாதிகள் என்னை கொடுமையாக கற்பழித்தனர்.

இப்போது நான் பேசுவது, நான் சந்தித்த கொடுமைகள் மட்டுமல்லாமல், என்னைப்போன்று இன்னும் ஏராளமான யாஸிதி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5,800 யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்களுடைய இஸ்லாமிய நகருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர், அவர்களை கொலை செய்வதும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதும் தான் அவர்களது வேலை.

குறிப்பாக, யாஸிதி இனத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்துவிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகின்றனர், ஐஎஸ் தீவிவரவாதிகளின் நகரமான சின்ஜாரில் 100 யாஸிதி இனப்பெண்களின் உடல்கள் கிடப்பதை பார்த்தேன்.

அத்தனை பெண்களும், தீவிரவாதிகளால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

தற்போது வரை 3,400 யாஸிதி பெண்கள் ஐ.எஸ் பிடியில் இருக்கிறார்கள், சொல்லப்போனால், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு யாஸிதி மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

எங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து தினந்தோறும் செத்துப்பிழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, ஐநாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இவர்,ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல