வெள்ளி, 29 ஜனவரி, 2010

முஜிபுர் ரஹ்மான் கொலை குற்றவாளிகளுக்கு தாமத தண்டனை ஏன்?

வங்கதேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் 27.01.2010 அன்று தூக்கிலிடப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் தாமதமாக நீதி கிடைத்தாலும் இந்தத் தீர்ப்பை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

"வங்க பந்து' என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான், 1971ல் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்தை மீட்டு தனி நாடாக்கினார். பின் அந்நாட்டின் அதிபர் ஆனார்.அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து, 1975, ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஜூனியர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் வெடித்த புரட்சியின் போது, அவரது மாளிகைக்குள் ஒரு கும்பல் புகுந்து முஜிபுர் ரஹ்மான், அவர் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் உள்ளிட்ட 20 பேரை, சரமாரியாக சுட்டுக் கொன்றது.இச்சம்பவத்தின் போது ரஹ்மானின் மற்றொரு மகளான ஷேக் ஹசீனாவும், இளைய சகோதரி ஷேக் ரெகானாவும் வெளிநாட்டில் இருந்ததால் தப்பினர்.அதன் பின் அந்நாட்டில் அமைந்த அரசு, கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் உயர்பதவி அளித்தது. சிலர், கட்சிகள் தொடங்கி நடத்தி வந்தனர். முஜிபுர் ரஹ்மானைக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்க வகை செய்யும் சட்டமும் கொண்டுவரப்பட்டது.அச்சட்டத்தின் கருணையால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வந்தனர். 1998ல் தாகா கோர்ட், முஜிபுர் கொலை வழக்கில் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் நான்கு பேர் மட்டும் உள்நாட்டில் இருந்தனர். மற்றவர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர்.
Bangladesh's former prime minister and Awami League chief Sheikh Hasina Wajed (L) receives flowers from her sister Rehana (R) and Khadina Hussain (C), sister of Bangladesh's founding father Sheikh Mujibur Rahman, during a family meet at her residence in Dhaka.

இந்நிலையில், 2001ல் பேகம் கலீதா ஜியா ஆட்சி அமைந்தவுடன், பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. 2007ல் அதுவரை கிடப்பில் போடப்பட்ட வழக்குத் திரும்பவும் தூசி தட்டப்பட்டது. 2008ல் குற்றவாளிகளுள் ஒருவரை அமெரிக்கா, வங்கதேசத்திடம் ஒப்படைத்தது.இதற்கிடையில், 2009ல் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.இதையடுத்து, முஜிபுர் மகள் ஷேக் ஹசீனா, 2009 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைத்தார். வழக்கை விரைவுபடுத்தினார். நேற்று முன்தினம் குற்றவாளிகளின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்த சில மணி நேரங்களில், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெயிலுக்கு முன் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, தண்டனையை உடனே நிறைவேற்றும்படி கோஷமிட்டனர். தாகா மத்திய சிறை மற்றும் காசிம்பூர் சிறைகளைச் சேர்ந்த ஏழுபேர் கொண்ட குழு, தண்டனையை நிறைவேற்றியது.பின் ஐந்து ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்ட உடல்கள், குற்றவாளிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஒருநாட்டின் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பின் தாமதமாக கிடைத்துள்ள நீதி பற்றி கருத்து கூறிய சில வக்கீல்களும் அரசியல் ஆய்வாளர்களும், "முஜிபுர் கொலை வழக்கில் தாமதமாக தண்டனை நிறைவேற்றப்பட்டாலும், இது நீதியிடம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தக்கவைத்துள்ளது. மேலும் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தனர்.

வியாழன், 28 ஜனவரி, 2010

நெட்டில் அரட்டை

இன்றைய செய்தித்தாள்களில் பல மோசடிகள், குறிப்பாக பாலியல் மோசடிகள் குறித்துப் படிக்கையில் பலர் இன்டர்நெட் சாட் ரூமில் தொடங்கிய பழக்கமே குற்ற வலையில் விழ தொடக்கமாயிருந்தது என வாக்குமூலம் கொடுத்திருப்பதைப் படித்திருக்கலாம். இன்டர்நெட்டில் சாட் ரூம் வழியே அரட்டை அடிப்பதைப் பல பள்ளி சிறுவர்களும் கல்லூரி மாணவர்களும் ஒரு போதையான பழக்கம் போல கொண்டுள்ளனர். தாமாகச் சென்று விழுந்தவர்கள் சிலர்; ஆனால் பலரும் குறிப்பிட்ட சில கிரிமினல்களின் வலையில் விழுந்தவர்களாகவே இருப்பார்கள். காரணம், இவர்கள் சாட் அறையில் பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடிக்காதவர்களாக இருந்திருப்பார்கள். இந்த வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

1.இணையத்தில் பல அபாயகரமான பேர்வழிகள் இருப்பார்கள். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். எனவே எந்த சாட் அறையிலும் உங்கள் உண்மையான பெயர், பெயர் அடங்கிய இமெயில் முகவரி, போன் எண், முகவரி போன்றவற்றைத் தரக் கூடாது.

2. எந்த நிலையிலும் உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறையினைக் கூற வேண்டாம். இது கிரிமினல்களுக்கு உங்களை வலை விரித்துப் பிடிக்க நேரத்தைத் தந்துவிடும்.

3. கம்ப்யூட்டர் வழி பழக்கமாகும் நபர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்கவும். உங்களுடைய நிஜ வாழ்வும் இன்டர்நெட் வாழ்வும் வெவ்வேறு. எனவே தவிர்ப்பது நல்லது. இல்லை சந்திப்பது நல்லதுதான் என எண்ணினால் பலர் இருக்கும் இடத்தில் சந்திக்கவும். தனியே சந்திப்பதோ அல்லது இதுவரை செல்லாத தனி இடத்தில் சந்திப்பதோ கூடவே கூடாது.

4. அரட்டை அரங்கங்களில் செல்கையில் மாடரேட்டர் என பொதுவான ஒரு மானிட்டர் இருக்கும் அறையில் செல்லவும். இதனால் ஒருவர் மற்றொருவருக்கு விரிக்கும் வலை தெரிந்துவிடும். மேலும் உங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று அவர் சென்றுவிட முடியாது.

5. அரட்டை அடிக்கையில் எதிர் நபரிடமிருந்து ஏதேனும் இணைய தள முகவரி கிடைத்தால் அதனைக் கிளிக் செய்து திறக்க வேண்டாம். அதில் நிச்சயமாய் வைரஸ் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. 6. எந்த நிலையிலும் உங்கள் போட்டோவினை அரட்டையில் எதிரில் உள்ளவருக்கு அனுப்ப வேண்டாம். உங்களை அவர் அறிந்து கொள்ளும் வழி இருப்பதுடன் அதனை அவர் தவறான வழிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

இன்டர்நெட் வழி சென்று அரட்டை அறைகளில் மற்றவருடன் பேசுவது நல்ல மகிழ்ச்சியான அனுபவத்தினை தரலாம். ஆனால் இதனை உங்களுக்கு மிகத் தெரிந்த நண்பர், உறவினர், உடன் பிறந்தவர் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுடன் வைத்துக் கொள்ளுங்களேன். புதிய நண்பர்களை அளவில் தூரத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்னவை அனைவருக்கும் பொருந்தாது என்றாலும் ஆபத்தை தவிர்ப்பதற்கான வழிகளைத் தருகின்றன என்பது உண்மை.

இலவச மென்பொருட்கள்

1. இயர் பான் வியூ (Irfanview): இதனை http://www.irfanview.com/ என்ற இணையதளத்தில் பெறலாம். கிராபிக்ஸ் வியுவர் புரோகிராம். ஒரே கிளிக்கில் உங்கள் இமேஜ் பைல் மற்றும் பலவகையான டிஜிட்டல் வீடியோக்களைப் பார்க்க இது உதவும். இதனைப் பயன்படுத்தி பைல்களை வேறு பார்மட்டிற்கு மாற்றலாம். சிறிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்புகளை எழுதலாம்.

2. ட்வீக் யு.ஐ (Tweak UI): : www.microsoft.com/windowsxp/downloads/powertoys/xppowertoys.mspx என்ற மைக்ரோசாப்ட் நிறுவன முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகமாக பரிந்துரைக்காத போதும் இதனைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். பல பயன்பாடுகளுக்கு இது ஏற்றதாக உள்ளதால் இது இல்லை என்றால் சிலருக்குக் கம்ப்யூட்டர் இயக்குவது கடினமாகும். இதனை இறக்கிப் பதிந்து பின் இதன் பயன்பாடுகளின் பட்டியலைக் காணலாம்.

3.டபுள்கில்லர் (DoubleKiller) : கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.bigbangenterprises.%20de/en/doublekiller இதன் மேம்படுத்தப்பட்ட புரோகிராமை பணம் கட்டியும் வாங்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலைப் பல இடங்களில் வைத்திருப்பீர்கள். குறிப்பாக சினிமா பாடல்களைப் பதிந்து வைத்துவிட்டு அவற்றை அவரவருக்கு குரூப் குரூப்பாக மீண்டும் இரண்டு முறையோ அல்லது பல முறையோ தனித்தனி போல்டர்களில் பதிந்து ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைக் காலி செய்திருப்பீர்கள். இத்தகைய டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு உங்கள் அனுமதியுடன் இந்த புரோகிராம் அழித்துவிடும்.

4. எக்ஸ்புளோரர் எக்ஸ்பி (ExplorerXP) : http://www.explorerxp.com/ என்ற முகவரியில் கிடைக்கிறது. எக்ஸ்பி சிஸ்டத்தில்தான் இது இயங்கும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு மாற்றானது. இதனுடைய டேப்கள் தனி வகையானவை. இந்த சிறிய புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் மற்றும் போல்டர்களை அதன் அளவு மற்றும் பிற பண்புகளுடன் காட்டுகிறது.

5. பிரீ கமாண்டர் (FreeCommander): http://www.freecommander.com/ இணையதளத்தில் இதனைப் பெறலாம். இந்த சிறிய புரோகிராமினை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் கூட எடுத்துச் செல்லலாம். எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தி அதில் உள்ள பைல்களைக் கையாளலாம்.

6. க்யூ டி டேப் பார் (QTTabBar): qttabbar.wikidot.com தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சில கூடுதல் பயன்பாடுகளைத் தருகிறது. டேப்கள் வழியே பைல்களைக் கையாளும் வசதியைத் தருகிறது. இந்த பயன்பாட்டுப் பைலை இறக்கி இன்ஸ்டால் செய்த பின்னர் எக்ஸ்புளோரர் சென்று டூல் பாரில் கிளிக் செய்து அதில் என்பதில் செக் செய்திடவும். அதில் உள்ள பட்டன் பார் உங்களுக்குக் கூடுதல் வசதிகள் தருவதனைக் காணலாம்.

7. டாஸ்க்பார் ஷபிள் 2.2 (Taskbar Shuffle 2.2) : www.freeweb.com/nerdcave/taskbarshuffle.htm என்ற தள முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் இது கிடைக்கிறது. டாஸ்க் பாரில் நீங்கள் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். ஓரிரு புரோகிராம்களை மட்டும் நீங்கள் அடுத்தடுத்து பயன்படுத்த விரும்புவீர்கள். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு கோடியில் இருக்கலாம். அடுத்தடுத்து இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். எனவே டாஸ்க் பார் உங்களைக் கட்டுப்படுத்தாமல் நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு இந்த புரோகிராம் அவசியம் தேவை. நீங்கள் விரும்பும் வகையில் இயங்கும் புரோகிராம்களின் பட்டன்களை அமைத்துக் கொள்ள உதவுகிறது. சில டாகுமெண்ட்களை இணைத்து ஒரே பட்டனில் அமைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் விண்டோஸ் 95 தொகுப்பு முதல் அனைத்திலும் இது இயங்குகிறது.

8. பிடாஸ்சியோ (Pitaschio) : pitaschio.ara3.net முகவரியில் கிடைக்கும் இந்த புரோகிராம் உங்கள் ஒர்க்கிங் ஸ்டைலுக்கேற்ற வகையில் விண்டோஸைத் தருகிறது. இது விண்டோவை உங்கள் ட்ரேக்கு சுருக்குகிறது. அப்படியே இழுத்துச் செல்ல உதவுகிறது. சில குறிப்பிட்ட கீகளின் பயன்பாட்டை அந்த செயலிலிருந்து விலக்குகிறது. எடுத்துக்காட்டாக விண்டோஸ் கீயை செயல் இழக்கச் செய்கிறது. இதனால் தேவையில்லாமல் அதனை அழுத்தி ஸ்டார்ட் பட்டனை அழுத்திய நிலை ஏற்படாது அல்லவா? உங்கள் கீ போர்டை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்ற புள்ளி விபரத்தினைத் தருகிறது.

9. ரீசைஸ் எனேபில் (ResizeEnable) : கிடைக்கும் இணைய தள முகவரி: www.digitallis.co.uk/pc/downloads.html இயக்குவதற்கு எளிதானது. விண்டோவில் எழும்பி வரும் பாப் அப் விண்டோவின் அளவைக் குறைக்க நீட்ட இது உதவுகிறது. தேவை என்றால் நீட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் குறைத்துக் கொள்ளலாம்.

10. ட்ரூ கிரிப்ட் (TrueCrypt) : பைல்களின் அளவைச் சுருக்கி விரித்துத்தான் பல புரோகிராம்கள் இயங்குகின்றன. அதே போல நீங்களும் உங்கள் பைல், போல்டர் ஏன் மொத்த டிரைவினையும் சுருக்கி வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? http://www.truecrypt.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். இதனைப் பயன்படுத்தி பிளாஷ் டிரைவில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கூட சுருக்கி வைத்துக் கொள்ளலாம்.

11. டிபிராக்ளர் (Defraggler) : சிதறிய வகையில் ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட்டிருக்கும் பைல்களைக் கூடுமானவரை ஒரே இடத்தில் பதிந்து வைக்கும் பணியே டிபிராக் எனப்படுவதாகும். துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றிருக்கும் பைல்களை ஒரே இடத்தில் பதிய வைப்பதால் கம்ப்யூட்டரின் சிபியூ அவற்றைத்தேடிப் படிக்கும் நேரம் குறைகிறது. இந்த வேலையை விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டிபிராக் பைல் யுடிலிட்டி மேற்கொள்கிறது. டிபிராக்ளர் தொகுப்பும் இந்த வேலையை மேற்கொள்கிறது. ஆனால் இதனைப் பயன்படுத்தி தனி ஒரு பைலையும் நாம் டிபிராக் செய்திட முடியும். அல்லது தொடர்புடைய பைல்களின் தொகுப்பினையும் மொத்தமாகத் தேர்ந்தெடுத்து டிபிராக் செய்திட முடியும். இந்த ஒரு பைலை பிளாஷ் டிரைவில் வைத்துக் கூட இயக்கலாம். இந்த பைல் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://www.defraggler.com/.

12. சிஸ்டம் ரெஸ்க்யூ சிடி: இந்த புரோகிராம் தரும் சிடி லினக்ஸ் சிஸ்டத்தை உங்கள் கம்ப்யூட்டருக்குப் பூட் செய்து தரும். ஒரு சிடியை லினக்ஸ் சிஸ்டம் தரக்கூடிய பூட்டபிள் டிஸ்க்காக மாற்றிக் கொண்டால் விண்டோஸ் சிஸ்டத்திற்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் விண்டோஸ் சிஸ்டம் கிராஷ் ஆகி கம்ப்யூட்டர் முன் நீங்கள் விழித்துக் கொண்டு கைகளைப் பிசைந்து கொண்டு இருக்கையில் இதனுடைய அருமை தெரியும். இதனை வைத்து பூட் செய்தால் கிடைக்கும் சிஸ்டம் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கும் வழி காட்டுகிறது. நெட்வொர்க் டிரைவ்களுக்கும் இது வழி நடத்தும். எனவே உங்களுக்குப் பிரியமான கம்ப்யூட்டர் சரியான நேரத்தில் காலை வாரிவிடுகையில் இந்த புரோகிராம் சிடி உங்களுக்குக் கை கொடுத்து தூக்கிவிடும். இந்த புரோகிராம் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://www.sysresccd.org/

என்ன விபரம்? யார் பைலை எழுதியது?

உங்கள் வர்த்தக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பல்வேறு எக்ஸெல் பைல்களை உருவாக்கிக் கையாண்டு வருவீர்கள். அலுவலக தகவல்களைப் பலர் பல நாட்களில் மாற்றியும் அதிகப்படுத்தியும் கையாளுவார்கள். இது பற்றிக் குறித்து வைத்திட பைல் புராபர்ட்டீஸ் என்று ஒரு விண்டோ ஒவ்வொரு பைலிலும் உள்ளது. இதில் பைல் குறித்த பல்வேறு தகவல்களைத் தர முடியும். பைலைக் கையாளும் ஒவ்வொருவரும் இதில் என்று யாரால் பைல் படிக்கப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது என எழுத முடியும்.

இதற்கு ஒரு பைலில் “File” மெனு கிளிக் செய்து அதில் வரும் “Properties" பிரிவைத் தேர்ந்தெடுத்தால் இந்த தகவல்களை உள்ளிட விண்டோ ஒன்று “Summary”, “Custom” போன்ற பல டேப்களுடன் கிடைக்கும். இதிலும் title, subject, author, manager, category, keywords, comments எனப் பல பிரிவுகள் இருக்கும். இதில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் பைல் குறித்த தகவல்களை நீங்கள் உள்ளிடலாம்.

அது சரி! ஞாபகமாக ஒவ்வொரு முறையும் பைலினை எடிட் செய்து மூடுகையில் இந்த தகவல்களை உள்ளீடு செய்திட வேண்டுமே! நாம்தான் வேலை முடிந்த பின் பைலை மூடிச் செல்வதில் தானே கண்ணும் கருத்துமாக இருப்போம். நமக்கு யார் இதனை ஞாபகமூட் டும் வேலையை யார் செய்வார் கள்? என்று எண்ணுகிறீர்களா? கவலைப் படாதீர்கள். எக்ஸெல் ஒர்க்புக்கே செய்திடும்.


இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும்.


1 “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.

3. இதில் “Prompt for workbook properties” என்னும் பிரிவில் செக் செய்திடவும்.

4. இதன்பின் ஓகே கிளிக் செய்து விண்டோவினை மூடவும். இனி ஒவ்வொரு முறை நீங்கள் எக்ஸெல் ஒர்க்புக் கினை சேவ் செய்து மூடப் போகையில் என்னங்க! பெர்சனல் தகவல்களைப் போடலியா?” என்று எக்ஸெல் உங்களுக்கு நினைவூட்டும். பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும்.

இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா! எடுத்துக் காட்டாக நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் பைசா இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும். எடுத்துக் காட்டாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கீழ்க்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும்.


நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை:


1. “Tools மெனு கிளிக் செய்து அதில் “ “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Edit” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Fixed decimal” என்னும் பிரிவில் செக் செய்திடவும். இப்போது Places” என்னும் இடத்தின் முன்னால் “2” என அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும்.

இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும். இந்த செயல்பாடு தேவையில் லை என்றால் “Fixed decimal” என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

RAM அண்ட் ROM வித்தியாசம்


கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன.

ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட் கள் சாதாரணமாய்ப் பேசப் படும் அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன. கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன் பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன.

RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப் பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே. ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும்.

எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAMமெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல் களைக் கொண்டு இயக்க விரும்பி னால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும். அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற் றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம்.


இவை இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளன. அவை:

SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMM எனப்படும் Dual Inline Memory Module ஆகும். முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையே அடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டரின் மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில் புரோகிராம்களை இயக்க முடியும். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்க தேவையாய் உள்ளது.

இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். . ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்கு தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.

டாகுமெண்ட்டில் வாட்டர் மார்க்

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும்.

வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம். டாகுமெண்ட்டில் வாட்டர் மார்க் அமைப்போமா! வாட்டர் மார்க்கா? டாகுமெண்ட்டில் அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும் இல்லையா? நீங்கள் வேர்டில் பெர்சனல் கடிதம் உங்கள் மனம் விரும்பிய காதலிக்கு எழுதுகிறீர்கள். அதன் பின்னணியில் அவர் உங்களுக்கு அளித்த படம் டெக்ஸ்ட்டைக் கெடுக்காத வகையில் வாட்டர் மார்க்காக இருந்தால் நன்றாகத்தானே இருக்கும். அல்லது உங்கள் சிறிய நிறுவனத்திற்கென பல கடிதங்கள் தயாரிக்கிறீர்கள். அந்தக் கடிதங்களின் பின்னணியில் நிறுவனத்தின் பெயர் அல்லது இலச்சினை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். வேர்ட் தொகுப்பில் இந்த வாட்டர் மார்க்கினை அமைத்திட வழி உள்ளது.

முதலில் எந்த டாகுமெண்ட்டிற்கு வாட்டர் மார்க் அமைத்திட வேண்டுமோ அதனைத் திறந்திடுங்கள். பின் டூல் பாரில் Format கிளிக் செய்து வரும் மெனுவில் Background என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் சிறிய விண்டோவில் Printed Watermark என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் Nணி ஙிச்tஞுணூட்ச்ணூடு, கடிஞிtதணூஞு ஙிச்tஞுணூட்ச்ணூடு மற்றும் கூஞுதுt ஙிச்tஞுணூட்ச்ணூடு என மூன்று பிரிவுகள் இருக்கும். இதில் நீங்கள் அமைக்க விரும்பும் பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் கேட்கும் பைல் அல்லது டெக்ஸ்ட்டினைத் தரவும். பின் அனைத்து விண்டோக்களுக்கும் ஓகே கொடுத்து வெளியே வந்தால் உங்கள் டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்து வைத்த படம் அல்லது டெக்ஸ்ட் மெல்லிய கிரே கலரில் டெக்ஸ்ட்டுக்குப் பின்புறம் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் மனதிற்கும் சந்தோஷமாக இருப்பதனை உணர்வீர்கள்.



டேபிள் எழுத்துக்களின் அகலத்தைக் குறைக்க:

வேர்டில் டேபிள் அமைக்கிறீர்கள். செல் ஒன்றில் டெக்ஸ்ட அடிக்கும் போது அகலத்திற்குச் சற்று அதிகமானால் அது என்ன செய்கிறது. சொல்லை அப்படியே சுழற்றி அடுத்த வரிக்குக் கொண்டு செல்கிறது.

இதனால் நீங்கள் எதிர்பார்த்து அமைத்த நீளத்திற்கும் சற்று அதிகமான உயரத்தினை செல் அமைத்துக் கொள்கிறது. மற்ற செல்களோடு ஒப்பிடுகையில் இது சற்று வித்தியாசமாகத் தெரிவதால் உங்களுக்கு மனது ஒப்பவில்லை. உடனே எழுத்துக்களைச் சற்று சிறியதாக்கி அடுத்த வரி சொல்லை மேலே இருக்கும் வரிக்கே கொண்டு செல்கிறீர்கள். ஆனாலும் மற்ற செல்களில் உள்ளதைக் காட்டிலும் எழுத்துக்கள் சிறியதாக இருப்பது உங்களை அதிருப்தியாக்குகிறது.

எழுத்தும் சிறியதாகக் கூடாது; ஆனால் வரிகளும் அதிகமாகக் கூடாது என்று விரும்புபவர்களுக்கு என்றே வேர்ட் ஒரு வழி தருகிறது. எழுத்தின் அளவை மாற்றாமல் அதன் உயரத்தை மாற்றாமல் அகலத்தை மட்டும் குறைக்கிறது. இதனால் எந்த வித்தியாசமும் தெரியாது. அதே நேரத்தில் வரிகளின் எண்ணிக்கையும் கூடுதலாவதில்லை. இதற்கு Tools பாரில் Table கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Table Properties தேர்ந்தெடுங்கள். இதில் Cell என்னும் டேபில் கிளிக் செய்தால் Cell Options என்ற பிரிவு கிடைக்கும்.

இந்த விண்டோவில் கீழாக Options என்பதன் கீழ் Wrap text மற்றும் Fit text என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில் Fit text என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி நீங்கள் டேபிள் செல்களில் டெக்ஸ்ட் அமைக்கையில் கூடுமானவரை எழுத்துக்களின் அகலத்தைக் குறைத்து டெக்ஸ்ட்டை அமைக்க வேர்ட் டேபிள் முயற்சி செய்திடும்.

தேவையற்ற கோடு வராமல் தடுக்கலாம்: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

ரைட் கிளிக்குடன் புதுவிதமான ட்ராக் அண்ட் ட்ராப்

பொதுவாக வேர்ட் டாகுமெண்ட்டில் செலக்ட் செய்து பேஸ்ட் செய்கையில் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இடது கிளிக் பட்டனை அழுத்தியவாறே இழுத்து வந்து தேவைப்படும் இடத்தில் விட்டுவிடுவோம். இடது பட்டன் இல்லாமல் அடுத்த முறை வலது பக்க பட்டனை அழுத்திப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் வேறு மாதிரிப் பயன் உள்ளதாக இருக்கும்.

எப்போதும் போல டெக்ஸ்ட்டின் எந்த பகுதியை காப்பி / பேஸ்ட் செய்திட வேண்டுமோ அதனை ஹைலைட் செய்திடவும். ஹைலைட் ஆன டெக்ஸ்ட் மீது மவுஸ் கர்சர் பாய்ண்ட்டைக் கொண்டு செல்லவும். இப்போது ரைட் கிளிக் செய்திடவும். அப்படியே டெக்ஸ்ட்டை புதிய இடத்திற்கு, எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ அந்த இடத்திற்கு, கொண்டு செல்லவும். அங்கு சென்று மவுஸின் ரைட் கிளிக் பட்டனை விட்டவுடன் நீங்கள் எப்போதும் இது போல ட்ராக் அண்ட் ட்ராப் செய்தது போல டெக்ஸ்ட் அங்கு ஒட்டப்படவில்லை என்பதை உணர்வீர்கள். அதற்குப் பதிலாக ஒரு சிறிய மெனு உண்டாகி இருப்பதைக் காணலாம்.

Move Here, Copy Here, Link Here, Create Hyperlink Here மற்றும் Cancel ஆகிய பிரிவுகள் இருக்கும். இதில் மூவ் ஹியர் மற்றும் காப்பி ஹியர் நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். டெக்ஸ்ட் இருந்த இடத்தில் இல்லாமல் புதிய இடத்தில் அமைத்திட மூவ்ஹியர் பயன்படுத்தலாம். பழைய இடத்திலும் இருக்கட்டும்; புதிய இடத்திலும் இருக்கட்டும் என்றால் காப்பி ஹியர் பயன்படுத்தலாம். லிங்க் ஹியர் என்பது எதனைக் குறிக்கிறது? இதுதான் புதுமையான பயன்பாடு. இதனைத் தேர்ந்தெடுக்கையில் அந்த டெக்ஸ்ட் புதிய இடத்தில் காப்பி செய்யப்படும். ஆனால் பழைய இடத்தில் உள்ள டெக்ஸ்ட்டில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்கினால் டெக்ஸ்ட் காப்பி செய்த இடத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே அங்கு ஏற்படுத்திய மாற்றங்கள் இங்கும் மேற்கொள்ளப்படும்.

மேலும் புதிய இடத்தில் ஒட்டப்பட்ட டெக்ஸ்ட் கிரே கலரில் முதலில் காப்பி செய்யப்படும். டாகுமெண்ட்டை சேவ் செய்து மூடுகையில் இந்த டாகுமெண்ட்டில் லிங்க் உள்ளது. இணைத்து சேவ் செய்திடவா என்று கேள்வி கேட்டு மூடும். பின்னர் பைலினைத் திறந்து ஒட்டப்பட்ட டெக்ஸ்ட்டில் மாற்றங்களை மேற்கொண்டால் மீண்டும் ஒட்டப்பட்ட டெக்ஸ்ட்டிலும் மாற்றங்களை உண்டு பண்ணும். இந்த லிங்க் ஒட்டல் அந்த பைலின் கட்டமைப்பில் ஓர் அங்கமாக எப்போதும் இருக்கும்.

அடுத்தபடியாக உள்ள Create Hyperlink Here வேறுவிதமான அனுபவத்தினைத் தருகிறது. இதனைக் கிளிக் செய்தாலும் லிங்க் ஏற்படுகிறது. ஒட்டப்பட்ட இடத்திற்குச் சென்ற பின் ஒரிஜினலாக இந்த டெக்ஸ்ட் எப்படி இருந்தது என்று பார்க்க விருப்பமா? அது எங்கிருக்கிறது? என்று அறிய ஒட்டப்பட்ட வரி ஒன்றில் கர்சரை வைத்து கண்ட்ரோல் அழுத்தி மவுஸ் கிளிக் செய்தால் கர்சர் ஒரிஜினல் டெக்ஸ்ட் உள்ள இடத்தில் சென்று நிற்கும். ஆனால் முதலில் கூறப்பட்டது போல ஒரிஜினலில் மாற்றங்கள் செய்தால் ஒட்டப்பட்ட இடத்தில் மாற்றங்கள் ஏற்படாது. நாம் தான் நாமாக அவற்றை மேற்கொள்ள வேண்டும்.

வேர்ட் தொகுப்பில்....


வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும். உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசையினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும்.

பின்னாளில் ஏதேனும் ஒரு வரிசையை இணைத்தாலோ அல்லது நீக்கினாலோ இரண்டாம் பக்கத்திலிருந்து உள்ள தலைப்பு அடுத்த பக்கத்திற்கோ அல்லது முந்தைய பக்கத்திற்கோ செல்லும். இந்த குழப்பத்தினைச் சரி செய்திட ஒரு வழியினை வேர்ட் தருகிறது. இதற்கான தீர்வினை Headings என்ற பகுதியில் பெறலாம். ஆம்; முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும். விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும். நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும். இரண்டாவது பக்கத்திலோ அல்லது வேறு பக்கத்திலோ உள்ள ஹெடரில் மாற்ற முடியாது. மேலும் முதல் பக்கத்தில் என்ன மாறுதல் செய்கிறோமோ அது மற்ற பக்கத்திலும் அப்படியே மாற்றப்படும். எத்தனை வசதிகள் பார்த்தீர்களா!

டேட் அன்டு டைம் ஷார்ட் கட்

வேர்ட் அல்லது பிரசன்டேசன் பைல்களில் அடிக்கடி தேதி மற்றும் நேரத்தினை பதிபவரா நீங்கள்! என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் டைப் செய்கிறீர்களா? வேண்டாமே! வேர்டில் Alt + Shift + D என அழுத்துங்கள். தேதி சிஸ்டத்திலிருந்து எடுத்து டைப் செய்யப்படும். நேரத்தை இடைச் செருக Alt + Shift + T அழுத்தலாம்.

பவர் பாயிண்ட்டில் இந்த கீகளை அழுத்தினால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் எந்த மாதிரி வகையில் டேட் மற்றும் டைம் அமைக்க வேண்டும் மற்றும் எந்த ஸ்லைடில் அமைக்க வேண்டும் என்பதனை முடிவெடுத்து செட் செய்து ஓகே அழுத்தினால் அதே போல தேதியும் நேரமும் அமைக்கப்படும். பார்த்தீர்களா! தேதியும் நேரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் உள்ளதே!

தென்கொரிய அதிபர் மனைவி மூதாததையர் அயோத்தி நகரத்தினர்


தற்போதைய தென்கொரிய அதிபர் லீ யுங் மியுங் பக்கின்(Lee Myung-bak) மனைவி, கிம் யூன் யோக்கின் (Kim Yoon-ok) முன்னோர்கள், அயோத்தியைச் சேர்ந்தவர்கள் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் "தி கொரியா டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி:அதிபர் மனைவி கிம்மின் முன்னோர், அயோத்தி அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அந்த பரம்பரையில் பிறந்த ஹியோ வாங் யோக் என்ற பெண், கொரியாவுக்கு வந்து அப்போது இங்கு அரசாண்ட மன்னரை மணந்து கொண்டார்.கொரிய மொழியில் எழுதப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த "சம்கக் யுசா' என்ற நூலில் இந்த செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஹியோ, தன் கனவில் அடிக்கடி ஒரு அழகான இளைஞரைக் கண்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக தன் பெற்றோர்களின் அனுமதியுடன் கப்பலேறி தென்கொரியா வந்து சேர்ந்தார்.

அப்படி வரும்போது, தன்னுடன் மீன்கள் படம் பொறித்த கல் ஒன்றையும் கொண்டு வந்தார்.தென்கொரியாவில், கயா பேரரசின் மன்னன் சுரோவைக் கண்டார். அவர்தான் தான் கனவில் கண்ட இளைஞர் என்று உணர்ந்த ஹியோ, சுரோவை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் மூலம்தான், கொரியாவில் கிம்ஹே கிம்ஸ் பேரரசு அமைந்தது.கடந்த 2004ல் கயா அரசர்களின் கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களும், இந்தியாவில் இப்பகுதியில் உள்ள குடிகளின் மரபணுக்களும் ஒத்திருந்தன. இதிலிருந்து கொரிய அரச பரம்பரைக்கும் இந்திய அரச பரம்பரைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.ஹியோ கொண்டு வந்த மீன்கள்படம் பொறித்த கல்லையும் தொல்பொருளாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இவ்வாறு "தி கொரியா டைம்ஸ்' கூறியுள்ளது.

வேர்டில் உள்ள டேபிளில் காணப்படும் டேட்டாவினைக் கொண்டு, அதனை ஒரு சார்ட் ஆக மாற்ற

வேர்ட் 97 முதல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. வேர்டில் உள்ள நீங்கள் குறிப்பிடும் அட்டவணையில் எண்களில் டேட்டா தரப்பட்டிருக்க வேண்டும்.

1. முதலில் சம்பந்தப்பட்ட டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இன்ஸெர்ட் (Insert) மெனு செல்லவும். இதில் ஆப்ஜெக்ட் (Object) என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

3. இதில் ஆப்ஜெக்ட் டைப் (Object Types) என்பதில் ஒரு பட்டியல் காட்டப்படும். இந்த பட்டியலில் Microsoft Graph Chart என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சில வேர்ட் தொகுப்புகளில் இது அந்த வேர்ட் தொகுப்பின் குறிப்பிட்ட பெயருடன் இருக்கலாம். எடுத்துக் காட்டாக Microsoft Graph 2000 Chart என இருக்கலாம்.

4. ஓகே கிளிக் செய்தவுடன் சார்ட் கிடைக்கும்.

5. இந்த சார்ட்டினை உங்கள் விருப்பத்திற் கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.

6. சார்ட்டுக்கு வெளியே கர்சரைக் கொண்டு வந்து தொடர்ந்து டாகுமெண்ட்டில் பணியாற்றலாம்.


=rand(5,4) என்ற கட்டளை

=rand(5,4) என்ற கட்டளை வேர்ட்டில் டெக்ஸ்ட் அமைக்க பயன்படுகிறது. வேர்டில் ஏதேனும் ஒரு பயன் பாட்டினை சோதனை செய்திட திட்டமிடுகிறீர்கள். அதற்கு டெக்ஸ்ட் வேண்டும். இதற்காக டைப் செய்து கொண்டிருக்க முடியாது. எனவே வேர்டில் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதனை டாகுமெண்ட் ஒன்றில் முதல் வரியில் தொடக்கமாகத் தந்தால் The quick brown fox jumps over the lazy dog என்ற வாக்கியம் தரப்படும். இந்த வாக்கியத்தின் சிறப்பினை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இது ஆங்கில மொழியின் அனைத்து எழுத்துகளும் உள்ள ஒரு வாக்கியம் ஆகும். நீங்கள் தந்துள்ள பார்முலாவில் உள்ள எண்களுக்கும் ஒரு வேலை தரப்படுகிறது. முதலில் தரப்பட்டுள்ள எண் பத்தியைக் குறிக்கிறது. அடுத்த எண் அந்த பத்தியில் இந்த வாக்கியம் எத்தனை முறை காட்டப்படும் என்பது குறிக்கப்படுகிறது. இங்கு ஐந்து பத்திகளில், ஒவ்வொரு பத்தியிலும் தலா நான்கு முறை இந்த வாக்கியம் அமைக்கப்படும்.

கேப்ஸ் லாக் கீ அழுத்தப்படுகையில் சிறிய அளவில் ஒலி கேட்கும் வகையில் செட் செய்திட

கேப்ஸ் லாக் மட்டுமின்றி, Num Lock மற்றும் Scroll Lock key ஆகியவற்றையும் அழுத்துகையில் ஒலி ஏற்படும். இதனால் நாம் பெரிய டாகுமெண்ட்களை வேக வேகமாக டைப் செய்திடுகையில் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்துவது நமக்கு அறிவிக்கப்படுகிறது. இதனை எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொண்டு செயல்படலாம். இந்த கீகளுக்கும், குறிப்பிட்ட இந்த வசதிக்கும் டாகிள் கீஸ் (Toggle Keys) என்று பெயர். இதனை இயக்க ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து அதில் Accessibility Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Accessibility Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள பிரிவுகளில் Toggle Keys என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு Use Toggle Keys என்று உள்ள இடத்தில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கட், டெலீட், பேக் ஸ்பேஸ்

கட், டெலீட், பேக் ஸ்பேஸ் இவற்றில் எதை அழுத்தினாலும் அது பின் நோக்கியோ அல்லது கர்சர் தேர்ந்தெடுத்தனையோ அழிக்கிறது. இதில் என்ன வேறுபாடு உள்ளது?

அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான். ஆனால் இவற்றின் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடு உள்ளது. இங்கு அதனைப் பார்க்கலாம். ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட்(CutCtrl+C) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது. அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace) பயன் படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்து விடுகிறது. இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்

விண்டோஸ் விஸ்டாவுடன் வந்த பல கேம்ஸ்கள் (Solitaire, Free Cell and Minesweeper) நீக்குவதற்கு

மேற்குறிப்பிட்ட கேம்ஸ்களை நீக்கலாம். அதனால் சிஸ்டம் இயங்கும் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது.

Start>Control Panel செல்லவும். பின் Programs and Features என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இதில் "Turn Windows Features On or Off" என்ற ஆப்ஷனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் உள்ள "Games" என்னும் பிரிவை விரிக்கவும். எந்த கேம்ஸ் எல்லாம் வேண்டாமோ அவற்றின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இந்த கேம்ஸ் அன் இன்ஸ்டால் ஆகிவிடும். பின் எப்போது இவை தேவையோ, அப்போது மீண்டும் இதே வழியாக அவற்றை இன்ஸ்டால் செய்திடலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல