திங்கள், 25 ஜனவரி, 2010

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா?

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகுப் பிரச்சினையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ் *மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் தலை யில் குளித்தால், பொ
 டுகுத் தொல்லை நீங்கும்.


*வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்தால், உடல் உஷ்ண குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலையில் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு தூளாக்கி தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைப் பயறு மா கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்போபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலையில் குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீல், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய்த் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமா கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலையில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து தலையில் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சினை நீங்கும்.

*தேங்காய்ப் பாலை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீல் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து தலையில் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலு மிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையில் குளித்தால் பொடுகு பிரச்சினை நீங்கும்.

கூந்தல் மிருதுவாக இருக்க...

*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை விதை நீக்கி பாலில் வேகவைத்து, மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து தலையில் குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச் சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல