யாழ்ப்பாணத்துக்குள் நுழைபவர்களை வரவேற்பதற்காக ஒரு அலங்கார வளைவு செம்மணி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கண்டி வீதியின் குறுக்காக இது கட்டப்பட்டுள்ளது.
தமிழ்க் கலாசாரத்துக்கு ஏற்ப இது அமைந்துள்ளது. இந்த அலங்கார வளைவைக் கடந்தே யாழ்ப்பாணத்துக்குள் நுழைய முடியும். யுத்த காலத்தில் இது சேதமடைந்தது. பின்னர் 2003 இல் செய்யப்பட்டது.
(யாழ்ப்பாண நகரத்தின் நுழைவாயில் வளைவு)
யாழ்ப்பாணக் கோட்டை
இலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் எஞ்சிநிற்கின்ற வரலாற்றுக் கட்டமைப்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை இன்றும் பறைசாற்றுகின்றன.
யாழ் கோட்டையிலிருந்து ஒல்லாந்தத் தேவாலயம்
யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் கோட்டை இன்று காணப்படுகின்றது.
1990 இல் இக்கோட்டையைக் கைப்பற்நிய விடுதலைப் புலிகள் இதனை இன்றைய நிலைக்குச் சிதைத்துவிட்டார்கள்.
யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகனில் மிக அற்புதமானதாகும். Xழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்நிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.
யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைப்பு செய்யப்பட்டதாகும்.
முதலில் முஸ்லிம்கனின் சிநிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்தது. பின்னர் போர்த்துக்கேயர் அப் பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கினர்.
ஒல்லாந்தர் இக்கோட்டையைப் புனரமைத்தனர். ஐங்கோண வடிவில் முதலில் உள்கோட்டையின் ஐங்கோண வடிவம் அமைக்கப்பட்டது. இதனை அவர்கள் 1680 இல் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 1792 இல் நிறைவுற்றது.
போர்த்துக்கேயரின் யாழ் கோட்டை
யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. உள்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்க `ளம் 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக்கற்கனினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்கனினால் அமைக்கப்பட்டவை. இக்கோட்டைகள் கடற்கரையோரங்கனில் அல்லது பாதைக் கடவைகனில் அமைந்திருந்தன.
ஊர்காவற்றுறை ஹெமன்Xல் கோட்டை, காங்கேசன்துறைக் கோட்டை, வெற்நிலைக்கேணி பாஸ் பைல் கோட்டை என்பன கடற்கரையோரங்கனில் அமைந்தன. இயக்கச்சி பெஸ்கட்டர் கோட்டை, ஆனையிறவுக்கோட்டை, பூநகரிக்கோட்டை என்பன பாதைக்கடவைகனில் அமைக்கப்பட்டன. இத்தகைய நிலைய முக்கியத்துவத்தினால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகனின் தாக்குதல்களை எதிர்கொண்டு முநியடிப்பது எனிதாகவிருந்தது.
யாழ் கோட்டையின் இன்றைய தோற்றம்
கோட்டைக்குள் கவனர் பங்களா, ராணி மானிகை, சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மானிகையில் வைத்து கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள்.
கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று `ர்ப்பாதை மற்றையது நிலப்பாதை. `ர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறமாகும்.
கோட்டைக்குள் ஒரு சதுரங்கத் தேவாலயம் குநிஸ்கோர்க் அமைந்திருந்தது. கோட்டையின் தென் கிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இன்று இக்கட்டிடங்கள் எதனையும் காணமுடியாது. விடுதலைப்புலிகனினால் தகர்ந்து `க்கப்பட்டு விட்டன.
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்ற சதியொன்று நடந்தது.
நல்லூர் முதலியாராகவிருந்த பூதத்தம்பி என்பவன் இதில் பங்குபற்நினான் என்பது குநிப்பிடத்தக்கது. இச்சதியeடுபட்ட கல்தேரா என்ற பாதிரியாரும் லூயிஸ் என்பவனும் ஏனையோரும் கொல்லப்பட்டனர். அக்காலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மையமாக யாழ் கோட்டை விளங்கியதால் இராசவாசல் எனப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் ஞானப்பிரகாசர் என்பவர் யாழ் கோட்டை சமையலறைக்கு மாடு ஒன்றை அனுப்ப விரும்பாது தமிழகம் ஓடிச்சென்றார். ஒல்லாந்தரின் பின்னர் கோட்டை ஆங்கிலேயர் வசமாகியது.
அவர்கள் காலத்தில் இலங்கை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டார்கள். வட மாகாண அரசாங்க அதிபர் நிர்வாகத்தை கோட்டையிலிருந்து மாற்நினார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் சுப்பீரிம்கோர்ட் `திபதி கோட்டை ராணி மானிகையில் தங்கினார். கோட்டையில் அதுக்கென ஒதுக்கப்பட்ட தூக்குமேடையில் அலுகோசுகள் எனப்பட்டோர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோரைத் தூக்கில் மாட்டினர்.
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இலங்கை அரசிற்கு எதிராக 1971 இல் புரட்சிசெய்த விஜயவீர, லால் சோமஸ்ரீ, பிரேமரத்ன முதலானோர் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களைச் சிறையுடைத்து விடுவிக்க நடந்த முயற்சி தோல்வி கண்டது. 1972 ஆம் ஆண்டிலிருந்து கோட்டையின் ராணி மானிகை பொலிஸ் விசாரணை இடமாகியது. சத்தியசீலனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் 40 இளைஞர்கள் வரை கைதாகி கடுமையாக விசாரிக்கப்பட்டனர்.
1984, ஜுலை 10ஆம் திகதி யாழ்ப்பாணக் கோட்டை ஈழ விடுதலை இயக்கத்தால் முற்றுகையிடப்பட்டது. போர்த்துக்கேயர் கோட்டைக்குள் இருந்த போது ஒல்லாந்தர் முற்றுகையிட்டதைப் போலவே போரானிகளும் முற்றுகையிட்டனர். கோட்டைக்குள் இலங்கை இராணுவம் அகப்பட்டுக் கொண்டது.
யாழ்ப்பாணக் கோட்டைக்குள்னிலிருந்து இலங்கை இராணுவத்தை வெனியேற விடாத முற்றுகையாக இது அமைந்தது. இந்த முற்றுகை 3 ஆண்டுகள் 23 நாட்கள் `டித்தது. 1987 ஒகஸ்ட் 03ஆம் திகதி இந்திய இராணுவம் கோட்டைக்குள் நுழையும் வரை இது `டித்தது.
யாழ்ப்பாணக்கோட்டையின் புறச்சுற்று வீதியில் புலிகனின் அரண்களோடு புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப். இயக்க குழுக்கனின் அரண்களுமிருந்தன.
இரு பகுதியினரும் மாநி மாநி ஷெல் தாக்குதல்கள் நடாத்திக் கொண்டனர். யாழ்ப்பாண நகரப்பிரதேசமும் அண்டியபகுதிகளும் இலங்கை இராணுவத்தின் ஷெல்களால் தகர்ந்தன. பொம்பர் குண்டு வீச்சுகளும் நடந்தன.
யாழ்ப்பாண கோட்டையின் அமைப்பு
இந்திய இராணுவம் வெனியேநிய பின்னர் மீண்டும் கோட்டை முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் அகப்பட்ட இலங்கை இராணுவம் விமானக் குண்டு வீச்சினை தீவிரப்படுத்தியது.
இராணுவத்துக்கான உணவு விநியோகம் ஹெலிகொப்டர்கனின் மூலம் நடந்தது. மாலை வேளைகனில் உணவுப்பொருட்களைக் காவிவரும் ஹெலிகள் அரைவாசி உணவைக்கடலில் போட்டன.
இறுதியில் கோட்டைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவம் கோட்டையின் `ர் வழியூடாகக் கோட்டையைவிட்டு வெனியேநியது. கோட்டைக்குள் நுழைவதற்கான `ர்வழி பிரித்தானியர் காலத்தில் பாதுகாப்பிற்காக அடைக்கப்பட்டிருந்தது.
அந்த `ர்வழியைப் பயன்படுத்தி இராணுவத்தினர் மண்டைதீவுக்குத் தப்பிச்சென்றனர். அதன்பின்னர் புலிகள் கோட்டையைக் கைப்பற்நி, அதனுள்னிலிருந்த கட்டடங்கள் அனைத்தையும் அத்திவாரத்துடன் தகர்த்தனர்.
கோட்டை மதிலை உடைத்து வடக்கு தெற்காகப் பெரியதொரு பாதையை ஏற்படுத்தினர்.
இன்று யாழ்ப்பாணம் கோட்டை ஆள்சந்தடியின்நிக் கிடக்கின்றது. எவரும் உள் சென்றுபார்த்துவர அனுமதியில்லை.
Thinakaran






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக