ஞாயிறு, 23 மே, 2010

இந்தியாவின் இன்றைய அரசியலை அன்றே எதிர்வு கூறிய பவிஷ்ய புராணம்!

ஒரு சோதிட ஆராய்ச்சி

மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் முக்கிய பாத்திரங்கள். தர்மத்தைக் காக்க வந்தவர்கள்.அதுபோல கௌரவர்கள் அதர்மத்தால் அழிய வந்தவர்கள். பாண்டவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு. தருமர் நீதியே உருவெடுத்தவர்; வாய்மை பிறழாதவர். பீமன் மகாபராக்கிரமசாலி. அருச்சுணன் வில்வித்தையில் நிகல்லாதவன். நகுலன் கால்நடை சாஸ்திர மறிந்து மிருக வளர்ப்பில் தேர்ந்தவன். அதேமாதிரி சகாதேவன் சோதிட நிபுணன். கணித்துச் சொன்னால் சொன்னதுதான். அச்சுப் பிசகாமல் நடக்கும். இவனது வாய்மையையும் நேர்மை யையும் அறிந்தே துரியோதனன் இவனிடம் வந்து பாரதப் போருக்கு நாள் குறித்துச் சென்றான். அவன் குறித்துக் கொடுத்த நாளில் போர் தொடங்கியிருந்தால் பாண்டவர்கள் வென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையில் கபடநாடக சூத்திர அவதாரியான கிருஷ்ண பரமாத்மா புகுந்து குழப்பினார். அவர்தான் பாண்டவர்கள் பக்கமாயிற்றே? நாளையும் கோளையும் மடக்கி நாடகமாடி அன்று நிகழவிருந்த அமாவாசைத் திதியை காலதாமதமாக்கினார். இதனை நம்பி ஏமாந்த அர்ச்சகர்கள் தர்ப்பணம் செய்யப் போக, நாளே குழம்பி நாசத்துக்கு வழிவகுத்தது.இந்த ஐவருக்குள் இளைய அருமையான தம்பி சகாதேவன் பல அரிய சோதிடக் கிரந்தங்களை உருவாக்கியுள்ளார்.

அதிலொன்று தான் “சகாதேவர் சோதிட நாடி' என்பது. இந்த அபூர்வமான ஓலைச் சுவடியை யாழ். நூலகத்தில் படிக்கும் பேறு பல வருடங்களுக்கு முன்னால் எனக்குக் கிட்டியது. அதனைப் படித்த கொஞ்ச நாளில் அந்நூலகம் விஷமிகளால் எக்கப்பட்டது. தமிழர்களின் அடிமடியில் கைவைப்பதாக நினைத்து இதனைச் செய்தவர்களின் பதவியும் அதிகாரமான நாகரிகத் தோற்றத்திற்குள் ஒளிந்திருந்த ஒரு காட்டு மிராண்டித்தனமான இனக்குரோத மனோபாவத்தை இந்த வெறிச் செயல் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.

தென் கிழக்காசியாவிலேயே பழம் பெரும் கலைப் பொக்கிஷங்களையும் புராதன நூல்கள் ஓலைச் சுவடிகளையும் வரலாற்று அரும் பொருட்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்த அரிய பெரிய நூலகம் முண்டு முளாசி எரிகிறது என்ற செய்தி கேட்டு, அதனை உருவாக்குவதில் பல வருடங்களாக முன்னின்று உழைத்த தமிழறிஞர் தாவீது அடிகளார் ஏங்கி அதிர்ந்து போய் அக்கணமே உயிர் துறந்தது நமக்கெல்லாம் என்றும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

அதுபோக இந்த சகாதேவர் சோதிட நாடிச்சுவடியில் எக்காலத்திற்குமேற்ற பல அருமையான சோதிடக் குறிப்புகள் காணப்பட்டன. அச்சுவடியிலிருந்து அப்போது எனது டயரியில் குறித்து வைத்திருந்த தகவல்களை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

அச்சுவடியில், அத்தனாபுரத்தை (தற்போதைய டில்லி) தலைநகராகக் கொண்டு பஞ்ச பாண்ட வர்கள் ஆண்ட காலத்தில் அதாவது இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பாரதத்தில் (இந்தியா) எந்தெந்த ஆட்சி எவ்வளவு காலம் நிகழும் என்பது குறித்து மகாபாரத காவியத்தின் சிருஷ்டிகர்த்தாவான வியாச முனிவர் எழுதியதாகக் கூறப்படும் “பவிஷ்ய புராணம்' என்ற கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
சகாதேவர் சோதிட நாடியில் இடைச் செருகலாக இந்தக் கிரந்தம் உள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வந்து இந்தியாவைக் கைப்பற்றி ஆண்டதை நாமறிவோம்.
அதுபற்றி பவிஷ்ய புராணத்தில் வியாசர் கூறியிருப்பதாவது, சுசேத துவீபத்திலிருந்து (ஐரோப்பா) கோ (பசு) மாமிசம் சாப்பிடும் மிலேச்சர்கள் (ஆங்கி லேயர்கள்) சாஸ்திரத்தில் கூறப்பட்ட உண்மைகளை மறைத்து மக்களை வேறு பாதையில் இழுத்துச் செல்ல பாரதத்திற்கு வந்து ஆட்சி செய்வார்கள். அவர்களுக்கு ஒரு ராணி (விகடாவதி நாம் நே) விக்டோயா மகாராணி எனப் பெயர் பெற்றவள் இருப்பாள். அவர்கள் எட்டுப் பேர் கொண்ட ஒரு சபையை அமைத்து ராஜ்ஜிய பரி பாலனம் செய்வர். (இதன்படி ஆங்கிலேய ஆட் சியாளர்கள் எண்மர் கொண்ட Vysroy Executive Council அமைத்து ஆட்சி செய்தது வரலாறாகும்.)

மொகலாயர்கள் முழு இந்தியாவையும் ஆட்சி செய்யப் போவது குறித்தும் அப்புராணத்தில் ஹேஷ்யம் கூறப்பட்டுள்ளது. அக்பர், பாபர், ஹூமாயூன் என்ற பேரரசர்களின் பெயர்கள் எப்படி வைக்கப்பட்டன என்பது குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளது. பாபன் பெயர் “பாபரேன சதுர் தேன' என்ற சொற்றொடல் வருகிறது. ஹுமா யூனின் பெயர் “தத் புத்ரே ஹோமா யூவ்சா' என்ற தொடரில் வருகிறது. ஹோமம் செய்து பாபர் தன் புத்திரனான ஹுமாயூனை உயிர் பிழைக்க வைப் பார் என்றும் அதனால் அவர் ஹுமாயூன் எனப் பெயர் பெறுவாரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “காஷ்மீரே தப்திகா' அதாவது காஷ்மீருக்கு அருகே
அவருக்கு அக்பர் என்ற பிள்ளை பிறக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் மக்கள் வரிப் பளுவால் மிகவும் கஷ்டப்படுவார்கள். ராஜ்ஜியத்தை ஆளுபவர்கள் நம்பிக்கை வைக்க முடியாத மனிதர்களாக (அயோக்கியர்களாக) மாறி ஆட்சியை அலங்கோலப்படுத்துவார்கள். அடிக்கடி கலகங்கள் நடக்கும். சனங்கள் செய்வதறியாது கலங்கிக் கண்ணீர் விடுவார்கள். எல்லா அரசியல் கட்சிக ளிலும் வெறுப்புத் தோன்றி, எல்லாக் கட்சிகளும் அழிந்து, மகா விஷ்ணுவின் பெயர் கொண்ட தென்னிந்தியர் ஒருவர், தெற்கேயிருந்து வடக்கே போய் இராணுவ ஆட்சி நடத்துவார். அவர் மிகவும் தர்மவானாக நடந்து கொள்வார். அப்போது அயல் நாட்டவன் படையெடுப்பு ஒன்றும் நிகழும்.

இவ்வாறெல்லாம் பவிஷ்ய புராணத்தினூடாக வியாசர் குறிப்பிட்டுள்ளார். இது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எதிர்வு கூறல். இன்று வரை அது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது என்பதை அவதானித்தால் உண்மை விளங்கும்.
இனி சகாதேவர் சோதிட நாடியில் குறிப்பிட்டுள்ள சில கிரக அமைப்புக்களையும் அவற்றின் விளைவுகளையும் எனது ஆய்வின் பிரகாரம் அவற்றுக்கு நான் கண்ட சில விதிவிலக்குகளையும் இங்கு தருகிறேன்...

(1) பூராடத்தில் கேது நிற்க, புதன், வியாழன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நால்வரும் இலக்கினத் திற்கு மூன்றாம் இடத்தில் நின்றால், அவ்விதம் அமைந்த சாதகர் பிறவியிலேயே செவிடனாயிருப்பார். (பூராடம் தனு ராசி)

இதில் என் விளக்கம் என்னவென்றால் இக்கூற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதே. இலக்கினத்துக்கு மூன்றாமிடம் பொதுவாக சுபக்கிரகங்களுக்கு மறைவுத் தானம் என்பதாலும் மூன்றாமிடம் வலது காதைக் குறிக்கிறது என்பதாலும் காது செவிடாகும் என இக்குறிப்புக் கூறுகிறது. ஆனால் இக்கிரகங்களில் சில 3 ஆம் இடத்தில் இருக்கையில் ஆட்சி, உச்சம் போன்ற நிலையைப் பெறமுடியும். அத்துடன் நவாம்சம் போன்ற வர்க்கங்களிலும் சுப பலம் பெற்றிருக்கமுடியும். அவைகளையெல்லாம் அவதானித்தே காது செவிடாகுமா, இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.

(2) எட்டாம் வீட்டுக்கு அதிபதியான ஒரு கிர கம் இலக்கினமாகிய முதலாம் வீட்டில் அமர்ந்து ஒரு பாவக்கிரகத்தின் பார்வை பெற்றால், அவ்விதம் அமைந்த சாதகர் காலகதியில் செய்தொழிலில் நட்டமடைந்து தன் சொத்துக்களையெல்லாம் இழந்து சோற்றுக்கு அலைவார் என்ற குறிப்பும் சகாதேவர் சோதிட நாடியில் உள்ளது.

இதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. சகாதேவர் கணிப்பின்படி இவை பொதுவான பலன்கள் என்பது ஒருபுறமிருக்க, எல்லா இலக்கின சாதகர்களுக்கும் இதன்பலம் பொருந்தி வருவதாயில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. மேட இலக்கினத்தில் பிறந்தவருக்கு இலக்கினாதிபதியாகும் செவ்வாயே அதன் எட்டாம் வீடாகிய விருச்சிகத்திற்கும் அதிபதியாகும். அதுபோல துலா இலக்கனத்தில் பிறந்த ஒருவருக்கு சுக்கிரனே இலக்கினாதிபதி யாகவும் இருப்பார். அதற்கு அட்டமத்தானமாகிய இடபத்திற்கும் அதிபதியாக இருப்பார்.
செவ்வாயைப் போலவே இவருக்கும் இலக்கினாதிபத்தியம் அட்டமாதிபத்தியம் ஏற்பட்டு ஆட்சி நிலையும் உண்டாவதால் சொத்துக்களை இழக்கும் நிலை ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்று அறிய வேண்டும். மேடம், துலாம் இரண்டையும் தவிர்த்து இதர இலக்கனதாரர்களுக்கே சகாதேவன் கூற்று பொருந்தி வரலாம்.

(3) சகாதேவன் இன்னொரு குறிப்பு இப்படிக் கூறுகிறது. ஆறாம் வீட்டுக்குய கிரகத்துடன் சந்திரனும் செவ்வாயும் கூடி 4 ஆம் வீட்டிலிருக்க, அவைகளை சூரியன் அல்லது சுபக்கிரகங்கள் பாராதிருக்கப் பிறந்த சாதகர், தன் மனைவியின் மூலம் புத்திர பாக்கியத்தைப் பெறத்தடை யுண்டாகும்; பிறந்தாலும் பிள்ளை தங்காமல் போகலாம். ஆனால் ஆசை நாயகி மூலம் அவருக்கு புத்திரப் பேறு அமையும்.

இதற்கும் விதிவிலக்கான எனது விளக்கம் வருமாறு:

புத்திரஸ்தானம் என்பது ஒரு சாதகத்தில் 5ஆம் வீடு. 4 ஆம் வீடு என்பது 5 ஆம் வீட்டுக்கு 12 ஆம் வீடாகும். 5 ஆம் வீட்டுக்கு இரண்டாவது வீடான 6 ஆம் வீட்டின் அதிபதி 4 இல் இருக்கும் போது 5 ஆம் வீட்டுக்கு விரயமான இடத்தை அடைந்தவராகிறார். சந்திரனும் செவ்வாயும் கூடினாலே ஆசை நாயகியின் முக்கியத்துவம் சாதகருக்கு உண்டாவதுண்டு. அந்த முக்கியத்துவத்தால் மகப்பேறு என்ற பயனை அவர் பெறவும் கூடும்.

ஆகையால் மேற்சொன்ன குறிப்பு ஒரு நுட்பமான கணிப்பு என்பதில் சந்தேகமில்லை.ஆனால் புத்திரகாரகன் வியாழன் வலுப்பெற்று, 5 ஆம் வீட்டுக்குய கிரகம் சுபபலம் பெற்று, களத்திரகாரகனான சுக்கிரனும் களத்திரஸ்தானாதிபதியும் (7 ஆம் வீட்டுக்குய கிரகம்), கிரக புடம், நவாம்ச புடம் போன்றவற்றில் சுப வர்க்கங்களில் செழிப்புற்றிருக்கக் காணப்பட்டால் அவ்விதம் அமைந்த சாதகருக்கு தொட்டுத் தாலி கட்டிய மனைவி மூலம் புத்திர பாக்கியம் உண்டாகவே செய்யும்.

(4) விருச்சிகத்தில் சந்திரன் இருந்து அதனை புதன் பார்த்தாலும் அல்லது அச்சந்திரனோடு புதனும் செவ்வாயும் கூடினாலும் அக்கிரக அமைப்பைக் கொண்ட சாதகர், தன் தந்தையல்லாத வேறொருவன் விந்துவுக்குப் பிறந்து தந்தையிடமே வளர்கின்றவர் என்றே கொள்ள வேண்டும்.

சகாதேவர் சோதிட நாடியிலுள்ள இக்குறிப்பும் நுட்பமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் நீசமடைவார். ஆனால் அங்கு அவருடன் செவ்வாய் கூடியிருந்தால், செவ்வாய்க்கு விருச்சிகம் சொந்த வீடு என்ற வகையில் சந்திரனுக்கு நீசபங்கம் ஏற் படும். இதனால் சோதிட நாடிக் குறிப்பில் சொல்லப்பட்ட பலன் மாற்றமடைய நியாயண்டு.

புதன் சந்திரனுக்கு பகைவன் என்ற காரணத்தால் புதனது சேர்க்கையால் சந்திரனுக்கு களங்கம் ஏற்படக் கூடுமென்ற கருத்தில் அக்குறிப்பு உள்ளது. சந்திரன் மாதுர்காரகன் என்பதால் மாதாவுக்குக் களங்கம் என்பது வேறொருவன் சேர்க்கையே என்பதாலும் இப்பலன் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சாதகன் மாதுர்ஸ்தானாதிபதி அதாவது 4 ஆம் வீட்டுக்குய கிரகம் பலம் பெற்று வியாழனுடைய பார்வையும் சந்திரனுக்கு அமைந்து விடுமானால் மேற்சொன்ன களங்கம் ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்று கூறலாம்.

(5) இலக்கினத்திற்கு எட்டாம் வீட்டில் வியாழனும் ராகுவும் கூடியிருக்க, இவர்களை சனி, செவ்வாய் பார்க்கப் பிறந்த சாதகர், திருட்டுப் புத்தி கொண்டவராயும் மோசடித் தொழில் செய்து பிழைப்பவராகவும் இருப்பார் என்பது சகாதேவன் இன்னொரு சோதிடக் குறிப்பு.

இக்கிரக நிலைக்கும் விதிவிலக்கான எனது ஆய்வையும் கூறுகிறேன்... இதுவும் ஒரு பொதுவான விதியாகும். இதனை இப்படியே ஏற்றுக் கொண்டால் நாம் எவ்வளவு தூரம் அறிவிலும் ஆய்விலும் வளர்ச்சி பெற்றுள்ளோம் என்பது கேள்வியாக வரும். பாதகமான பலன்கள் அல்லது விளைவுகள் என்னும் போது ஏன் எதற்கு எப்படியென்று ஆராய்ந்தால் பாதகமான பலனை நமக்குச் சாதகமாக மாற்றியமைக்கவும் முடியும்.

ஒரு சாதகத்தில் 5 ஆம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம். அதாவது நமது ன்ஜென்ம கொடுப்பினையைக் குறிக்குமிடம். 9 ஆம் வீடானது தருமம், பாக்கியம் ஆகியவைகளைக் குறிக்குமிடம்.
இந்த இரு வீடுகளுக்குய கிரகங்கள் பலம் பெற்று, தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் வீட்டுக்குரிய கிரகம் வலுப் பெற்றிருந்தால் 8 இல் இராகுவும் வியாழனும் இணைந்து, அவைகளை சனி, செவ்வாய் பார்ப்பதால் உண்டான தீய பலன்கள் அகன்று விடுமென்பது எனது கருத்து.

இந்த மூன்று கிரகங்களும் வலுப்பெற்றால் சாதகர் மனச்சாட்சியுடையவராயும் நேர்வழியில் பணம் சம்பாதிப்பவராகவும் இருப்பார். வியாழனும் இராகுவும் எட்டில் மறைவதால் ஏற்படும் தீயபலனை, இம்மூன்று கிரகங்களினதும் சுப பலன்கள் இல்லாமல் செய்து விடுமென்பது திண்ணம்.

(6) 12 ஆம் இடத்தில் வியாழன் இருக்கப் பிறந்தவர் அரச தண்டனையைப் பெறுவாரென்றும், எட்டாம் வீட்டுக்குய கிரகம் ஒன்பதாம் வீட்டிலிருக்கப் பிறந்தவர் அரச தண்டனையில் தம் சொத்துக்களையும் இழந்து பரதேசியாய் அலைவாரென்றும் சகாதேவன் மற்றொரு குறிப்புக் கூறுகிறது. இதற்கு விதிவிலக்கான எனது விளக்கத்தையும் இங்கு தருகிறேன்...

எல்லா இலக்கனகாரர்களுக்கும் இக்கூற்றுப் பொருந்தாது. மேட இலக்கினத்திற்கும் மகர இலக்கினத்திற்கும் வியாழன் 12 இல் இருக்கும் போது மீனம், தனுசு என்ற தமது சொந்த வீடுகளில் இருப்பவராகிறார். சுபக் கிரகமோ, அன்றித் தீய கிரகமோ எந்தக் கிரகத்திற்கும் அதனை தன் சொந்த வீடு பலம் வாய்ந்ததாகும். பலம் என்னும் போது சாதகருக்கு அது நன்மையே செய்யும். மேலும் சிங்க இலக்கினத்திற்கு 12 இல் இருக்கும் போது வியாழன் தனது உச்ச வீட்டில் (கடகம்) இருப்பவராகிறார். இதனாலும் வியாழனின் பலம் அதிகரிக்கும். எனவே இம்மாதி கிரக நிலையை தம் சாதகத்தில் கொண்டவர் அரச தண்டனைக்குள்ளாகாமல் தப்பிக்க முடியும்.

மிதுன இலக்கினத்திற்கு எட்டாம் வீட்டோன் சனி ஆவார். இவர் ஒன்பதாமிடமாகிய கும்பத்தில் இருக்கும் போது தனது சொந்த வீட்டில் பலத்துடன் இருப்பவராகிறார். ஆகவே, இந்த அமைப்பில் எட்டாம் வீட்டுக்குரிய கிரகம் ஒன்ப தாம் வீட்டில் இருந்தால் என்ன பயன் விளையு மென்று சகாதேவன் குறிப்புக் கூறுகிறதோ அத்தீய பலன் சுபபலனாக மாறி விட முடியும்.

திருவோணம்
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல