o மகாத்மதா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாபிரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
o முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
o கைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி,
o மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
o பசுமைப் புரட்சி என்று கேள்விப் பட்டிருப்போம். அது என்ன இளஞ் சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
o நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப்புரட்சி என் பது பால் உற்பத்தியை குறிப்பதும் ஆகும்.
o மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக் களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
o பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
o ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
o மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
o மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு செம்பு உள்ளது.
o ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்பு களின் மொத்த நீளம் சுமார் 72 மீட்ட ராகும்.
o நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு ந ¡ளைக்கு 23, 040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
o நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
o மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் கலங்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
o உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட் .
o ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லீற்றர்.
o கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
o மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
o கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப் படுகின்றன.
o 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக