ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

புதிய வாக்காளர் அட்டைகளில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக குறிப்பிடப்படவுள்ளதாக பங்களாதேஷ் தேர்தல் ஆணையகம் அறிவிப்புச் செய்துள்ளது.

அந்நாட்டில் 200,000 விபசாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு விபசாரம் சட்டபூர்வமானதாக உள்ளபோதும் அதற்கு இதுவரை ஒரு தொழிலாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களாலும் பொலிஸாராலும் அவதூறு க்குட்படுத்தப்பட்டும் அடிக்கப்பட்டும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வரும் அந்நாட்டு விபசாரிகளுக்கு தமது நிலை குறித்து அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக இந்நடவடிக்கை அமை வதாக அந்நாட்டு தொண்டு ஸ்தாபன மொன்றின் அதிகாரியான அஸிப் இக்பால் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையில் விபசாரம் என்பது எழுத்து வடிவில் அல்லாமல் சங்கேத அடையாளமாகப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அதனை தேர்தல் ஆணையக உத்தியோகத்தர்கள் மட்டுமே கண்டறிய முடியும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெவரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல