அவரது உடலில் நாணயங்கள், கரண்டிகள், ஊசிகள் போன்ற உலோகப் பொருட்கள் பசைபோட்டு ஒட்டியது போன்று சில நிமிட நேரத்துக்கு ஒட்டிக் கொண்டிருப்பதாக தெவிக்கப்படுகிறது.
பிரெண்டாவின் (Brenda Allison 50 வயது) உடலில் காணப்படும் அதிகளவான காந்த மின்னேற்றத்தால் மின்குமிழ்கள் வெடிப்பதுடன் கார் அலாரங்களும் அடிக்க ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவரது உடலில் காணப்படும் உயர் அழுத்தம் காரணமாகவே உடலில் காந்தத் தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவரது உடலிலான அழுத்தத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
வட லண்டனிலுள்ள ஹெல்லோவேயில் வசிக்கும் பிரெண்டா இது தொடர்பில் விபரிக்கையில், ““எனது தசைகளை விட நரம்புகளே உலோகப் பொருட்களை அதிக நேரம் ஈர்த்து வைத்திருக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. நான் எனது மகனின் அறைக்குள் செல்லும் போது அவனது விளையாட்டுப் பொருட்கள் தானாக இயங்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் நான் அருகில் செல்கையில் தொலைக்காட்சி ஒளி பரப்பிலும் குழப்பம் ஏற்படுகிறது'' என்று கூறினார்.
பிரெண்டாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த விநோத சக்தி குறித்து மின்னியல் சிகிச்சை நிபுணரான கதி ஜெமினியானி விபரிக்கையில், ““மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாகவே சிறிதளவு காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது. ஆனால் பிரெண்டாவிடம் காணப்படும் சக்தியானது அசாதாரணமானதாகும்'' என்று தெவரிவித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக