ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் முகத்தை மூடி ஆடை அணியத் தடை அவுஸ்திரேலிய நீதிபதி உத்தரவு

மோசடி வழக்குகளில் ஆஜராகி சாட்சிய மளிக்கும் போது முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியக்கூடாது என அவுஸ்திரேலிய நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

பேர்த் நகர நீதிபதியே இவ்வாறு உத்தர விட்டுள்ளார்.
தஸ்னீம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் 36 வயதுப் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தனது முகத்தை மூடிய துணியை அகற்ற மறுத்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக இடம் பெற்ற நீதிமன்ற வாதத்தையடுத்து மேற்படி தீர்ப்பை நீதிபதி ஷயுனா டியனே வழங்கியுள்ளார்.

கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தஸ்னீம், தனது 17 வயது முதல் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல