எகிப்திய ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஹிஷாம் தலாத் முஸ்தபாவுக்கு ஆரம்ப கட்ட வழக்கு விசாரணைகளின் போது மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு தற்போது வழங்கப்பட்ட 15 வருட சிறைத்தண்டனை போதுமானதல்ல என பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.
ஹிஷாம் தலாத் முஸ்தபாவின் உதவியாளரான மொஹ் ஸென் அல் சுக்காரிக்கு சூஸன் தாமிமை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துபாயில் ஹிஷாம் தலாத் முஸ்தபாவுக்கு சொந்தமான ஹோட்டலொன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக சூஸன் தாமிம் மீட்கப்பட்டார்.
சூஸன் தாமிமை திருமணம் செய்ய விரும்பிய ஹிஷாம் தலாத் முஸ்தபா தனது எண்ணத்தை வெளியிட்ட போது, சூஸன் தாமிம் அதனை நிராகரித்தமையே இந்த படு கொலைக்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது.
சூஸன் தாமிமை படுகொலை செய்வதற்காக ஹிஷாம் தலாத் முஸ்தபா, மொஹ்ஸன் அல் சுக்காரிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலரை கட்டணமாக செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே திருமணமான ஹிஷாம் தலாத் முஸ்தபாவிடம் சூஸன் தாமிம் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற உதவி கேட்டதையடுத்தே, ஹிஷாம் தலாத் முஸ்தபா அவரைக் காதலிக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
எனினும் சூஸன் தாமிம் அதன் பின் லண்டன் சென்று குத்துச்சண்டை வீரருடன் வாழ ஆரம்பித்ததையடுத்து ஹிஷாம் தலாத் முஸ்தபா சினமடைந்துள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக