வெள்ளி, 1 அக்டோபர், 2010

ஒருவருக்கு இரண்டு முறை அடுத்தடுத்து லாட்டரி பரிசு

எர்னஸ்ட் புல்லன் மனைவி பெற்ஸியுடன்

அமெரிக்காவில் உள்ள மிசோரியை சேர்ந்தவர் எர்னஸ்ட் புல்லன். 57 வயதான இவர் சுரண்டல் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கம் உடையவர். அவர் கடந்த மாதம் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்தது. இந்த மாதமும் அவர் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி இருந்தார். அதில் ஒரு சீட்டுக்கு மேலும் ரூ.10 கோடி பரிசு கிடைத்தது.

ஒருவருக்கே அடுத்தடுத்து லாட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி எர்னஸ்ட் புல்லன் கூறுகையில், நான் ஒரு அதிர்ஷ்டக்காரன். இதனால் தான் தொடர்ந்து பெரிய தொகை பரிசாக கிடைத்து இருக்கிறது. இதே போல 8 ஆண்டுகளுக்கு முன்பும் எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது. இவ்வளவு பணம் கிடைத்தாலும் என் கனவு நிறைவேறி விட்டதாக நான் கருதவில்லை என்று குறிப்பிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல