இவருடைய கஷ்டத்தை கருத்தில் கொண்டு பீஜிங்கில் உள்ள சீன மறுவாழ்வு ஆராய்ச்சி மையம் ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியது. அரை முட்டை வடிவ சாதனத்துடன், இரண்டு ஸ்டீல் கம்பிகள் இணைக்கப்பட்டு, ஷூ பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பக்கெட்டில் இவர் அமர்ந்து கொள்கிறார். இரு கேபிளால் இணைக்கப்பட்டு இருக்கும் கால்கள் இவரை இயக்குகின்றன. இந்த சாதனத்தில் அமர்ந்து நடந்து அனைவரையும் அசத்துகிறார்.
இந்த சாதன உதவியுடன் பெங் சுலின் நடப்பது மருத்துவ உலகிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது வயதில் இருப்பவர்களைக் காட்டிலும் இவரது உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை துணை தலைவர் லின் லியு கூறியுள்ளார். உடல் ஊனத்தால் சோர்ந்து விடாமல் ‘ஹாப் மேன் ஹாப் பிரைஸ் ஸ்டோர்’ என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார். செயற்கை உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு "ரோல் மாடல்" ஆக, சக்கர நாற்காலியில் அமர்ந்து, ஊனத்தில் "இருந்து எப்படி மீள்வது" என்று சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக