புதன், 8 செப்டம்பர், 2010

உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரிப்பதில் உலக சாதனை

பெல்ஜியத்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணரான கிறிஸ் வெர்ஸ்சுயரன் (Chris Verschueren,53 வயது) 83 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் 1987 ஆம் ஆண்டு 72 மணி நேரமாக உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரித்து பிரித்தானிய சமையல் கலை நிபுணர் ஒருவரால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.

தொடர்ச்சியாக 83 மணித்தியாலங்கள் உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரிப்பதில் ஈடுபட்டதால் தனது கால்களிலும் மணிக்கட்டுக்களிலும் விரல்களிலும் கடுமையான வலி ஏற்பட்டதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு 20 மணித்தியாலங்களுக்கு இடையிலும் 100 நிமிட ஓய்வை எடுத்துக் கொண்ட கிறிஸ் வெர்ஸ்சுயரன், 1500 கிலோகிராம் நிறையுடைய உரு ளைக்கிழங்கு பொயல் உண வை தயாத்துள்ளார்.

பிறந்தது முதல் சுகவீனமுற்றிருக்கும் தனது 5 வயது பிள்ளை உட்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு உதவுவதற்கு நிதி சேகரிப்பதற்காகவே இந்த சாதனை முயற்சியில் களம் இறங்கியதாக அவர் தெவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல