செவ்வாய், 28 செப்டம்பர், 2010

வடகொரியா அதிபரின் மகன் கிம் ஜோங் உன் பொய்யான பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்

வடகொரியா அதிபர் கிம் ஜோங் இல், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அவர் தன் 3-வது மகன் கிம் ஜோங் உன்-னை தன் வாரிசாக நியமிக்க தீர்மானித்து இருக்கிறார். அவர் இந்த மாத இறுதியில் நியமிக்கப்பட இருக்கிறார்.

கிம் ஜோங் உன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லைபீபெல்டு நகரில் உள்ள அரசாங்க பள்ளிக்கூடத்தில் படித்தவர். 1997-ம் ஆண்டு அவர் அந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். அப்போது அவர் தன் உண்மையான பெயரில் அல்லாமல் பாக் உன் என்ற பெயரில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் படித்த போர்ச்சுக்கீசிய இளைஞர் ஜாவோ மைக்கலோ கூறுகையில், அவர் எனக்கு சாதாரண டீனேஜர் போல தான் இருந்தார். ரொம்பவும் அமைதியானவர். அவருக்கு கூடைப்பந்து விளையாடுவதற்கு ரொம்பவும் பிடிக்கும் என்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல