செவ்வாய், 28 செப்டம்பர், 2010

உயிருடன் உள்ளார் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.. அபாய கட்டத்தைத் தாண்டினார்!

இசையமைப்பாளர் சந்திரபோசின் உடல்நிலை அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது மகன் வினோத் கூறினார்.

சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் அவர் நினைவிழந்து, 'கோமா'வில் மூழ்கினார். அவரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.

சந்திரபோசின் வீடு, சென்னை மைலாப்பூரில் உள்ளது. அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகிய இருவரும் நேரில் சென்று பார்த்தனர்.

சந்திரபோசை சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். அதன்படி, சந்திரபோஸ் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந் நிலையில் அவர் கோமாவிலிருந்து மீளாமலேயே இருந்தார். உடல்நிலையும் மிகுந்த அபாய கட்டத்தில் இருந்தது. எனவே அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.

இப்போது, டாக்டர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் நலம் பெற்று வருவதாகவும் சந்திரபோஸ் மகன் வினோத் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல