செவ்வாய், 28 செப்டம்பர், 2010

இங்கிலாந்து மன்னராட்சி முட்டாள்தனமானது

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது என்றும், இன்றைய நாகரீக காலத்துக்கு ஏற்றது அல்ல என்றும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விமர்சித்து இருக்கிறார்.

மரண தண்டனை

சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறியவர். அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர். 63 வயதான இவர் எழுதிய சாத்தானின் கவிதைகள் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தில் முஸ்லிம்களை இவர் விமர்சனம் செய்வது மாதிரி எழுதியதற்காக இவருக்கு மரணதண்டனை விதித்து ஈரான் மதத்தலைவர் கொமேனி மதக்கட்டளை(பட்வா) பிறப்பித்தார். அப்போது இவருக்கு இங்கிலாந்து பாதுகாப்பு அளித்தது.

அவர் இங்கிலாந்து மன்னராட்சியை விமர்சித்து பேசி இருக்கிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முட்டாள்தனமானது

இங்கிலாந்து மன்னராட்சியும், அதன் மரபுகளும் முட்டாள்தனமானது. அவை காலத்துக்கு ஏற்றாற்போல இல்லை. மன்னராட்சி நடைமுறை இன்றைய நாகரீக காலத்துக்கு ஏற்றது அல்ல. அசாதாரணமானது.

இவ்வாறு சல்மான் ருஷ்டி கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் இப்படி கூறும் நீங்கள் ஏன் மன்னராட்சியால் வழங்கப்பட்ட கவுரவத்தை (நைட்குட்) ராணியின் கையால் வாங்கிக்கொண்டீர்கள் என்று கேட்டனர். அது என் எழுத்துக்கு கிடைத்த கவுரவம் என்று அவர் குறிப்பிட்டார்.

4 முறை திருமணமானவர்

சல்மான் 4 முறை திருமணம் ஆனவர். தன் காதல் வாழ்க்கை முடிவற்றது. தன் 3-வது மனைவி எலிசபெத் வெஸ்ட்உடன் நான் இப்போது நட்புடன் இருக்கிறேன். அவரை தினமும் சந்திக்கிறேன். முதல் மனைவி கிளாரிசா லுவார்டு உடன் எப்போதும் நான் நட்புடன் தான் இருந்தேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறக்கும்போது நான் அவருடன் அவரது அறையில் தான் இருந்தேன். அப்போது எங்கள் மகன் சபர் எங்களுடன் இருந்தான். அவரை நான் விவாகரத்து செய்தது ஒரு விபத்து தான். அது எங்கள் மகன் சபருக்கு நல்லதாக அமைந்தது. அப்போதுதான் பட்வா விதிக்கப்பட்டது. அப்போது சபருக்கு 9 வயது. நான் தலைமறைவாக இருந்தபோது என் மகன் சபர் தன் தாயாருடன் சுதந்திரமாக வசிக்க முடிந்தது.

கடைசி மனைவி பத்மாவை நான் என்றுமே நினைத்தது இல்லை. அவரை நான் என்றும் பாராட்ட மாட்டேன்.

இவ்வாறு சல்மான் ருஷ்டி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல