செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பாடனாரின் கட்டியணைப்பால் உயிருக்கு போராடும் பெண்

44 வயது பெண் ஒருவர் கொடிய நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதற்கு, அவர் சிறு வயதாக இருந்தபோது பாட்டனாரின் கட்டியணைப்புக்கு உட்பட்டமையே காரணமென கண்டறியப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

டெபேரா எட்வார்ட்ஸ் என்ற மேற்படி பெண்ணின் பாட்டனாரான ஜக்டுப்பின், பிளைமவுத் துறைமுக கப்பல்களில் வந்திறங்கும் அஸ்பெஸ்டோஸ் நார் தகடுகளை இறக்குவதில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் வேலையை முடித்து திரும்பும் பாட்டனார், உடையை மாற்றாமலே தனது சின்னஞ்சிறு பேத்தியை கட்டியணைத்து தூக்கிக் கொஞ்சுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவரது ஆடையிலுள்ள அஸ்பெஸ்டோஸ் தூசுப் படலம் டெபேராவின் மூக்கினூடாக அவரது நுரையீரலை சென்றடைந்துள்ளது. ஜக்டுப்பின் 2000 ஆம் ஆண்டு தனது 86 ஆவது வயதில் மெஸோதேலி யோமா என்ற நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது பேத்தியான டெபேரா எட் வார்ட்ஸுக்கும் பாட்டனாருக்கு ஏற்பட்ட அதே மெஸோதேலியோமா புற்றுநோய் ஏற்பட்டுள் ளது.

டெபேரா 9 மாத காலம் மட்டுமே வாழ்வார் என மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். தற்போது தனது வாழ்க்கைத் துணையான போல் ஸ்டீவன்ஸன் மற்றும் பிள்ளைகளான டியனி (23 வயது) மற்றும் கால் (21 வயது) ஆகியோரின் பராமரிப்பில் டெபேரா மரணத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

டெபேராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையானது பிள்ளைகளைக் கையாளுகையில் சுகாதாரத்தில் எத்தனை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல