ஞாயிறு, 3 அக்டோபர், 2010

107 வயதில் பல்லு முளைத்துள்ளது

‘பல்லு போனால் சொல்லுப் போச்சு’ என்பார்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் சொல்லைக் காப்பாற்றினாலும் பல்லைக் காப்பாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இயற்கை விதியை முறியடித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 107 வயது பெண்மணி.

ஜியாவோ ஜென்வா என்ற அந்த 107 வயது மூதாட்டி. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது வாயிலிருந்த பற்கள் முழுவதும் ஒவ்வொன்றாக விழுந்து விட்டது. சில ஆண்டுகள் செயற்கைப் பல் வைத்திருந்த ஜென்வா அதையும் கழற்றி வீசிவிட்டார். அதன்பின் பற்களே இல்லாமல் பொக்கை வாயுடன் காட்சியளித்த ஜென்வாவின் வாயில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து வலி ஏற்பட்டது. வைத்தியர்களால் கூட அந்த வலியின் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

சில நாட்கள் கழித்து ஜெனிவாவின் வாயில் ஒவ்வொரு பல்லாக முளைக்கத் தொடங்கியது. குறுகிய இடைவேளையில் பல பற்கள் முளைத்து விட்டன. இப்போது ஜெனிவாவின் வாய் நிறைய பற்கள் கடினமான பொருட்களை அனாயாசமாக கடிக்கிறார். எலும்புகளை சுக்குநூறாக்குகிறார். 60 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குடும்பம் இப்போது உற்சாகத்தில் திளைக்கின்றனர். ஜெனிவாவின் புகழ் சீனா முழுவதும் ‘பல்கிப் பெருகி வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல