ஞாயிறு, 3 அக்டோபர், 2010

கைகள்- கண்களை கட்டி இளைஞர்களை பாக். ராணுவம் சுட்டு கொல்லும் வீடியோ காட்சி (வீடியோ, படங்கள் இணைப்பு)

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவம் வேட்டையாடி வருகிறது. சுவாத் பள்ளத்தாக்கு, தெற்கு வசிரிஸ்தான் பகுதிகளில் பெருமளவில் பதுங்கியுள்ளனர். அப்பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது.


இதற்கிடையே, தீவிரவாதிகள் என்ற பெயரில் கைது செய்யப்படும் இளைஞர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் தற்போது இளைஞர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொல்லும் வீடியோ காட்சிகள் ஒரு இன்டர்நெட்டில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், 2 கைகளும் பின்புறம் கட்டப்பட்டும், கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்ட நிலையிலும் 6 இளைஞர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈவு இரக்கமின்றி சுடுகின்றனர். அவர்களில் பல இளைஞர்கள் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்து மண்ணில் சாய்கின்றனர்.

பின்னர் அவர்களின் உடல்களை இழுத்து சென்று குவியல் குவியலாக வைக்கின்றன. இந்த வீடியோ காட்சிகள் செல்போன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோவில் தோன்றும் ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் பேசப்படும் உருது மொழியை பேசுகின்றனர்.

அவர்கள் ஜி-3 கைத்துப்பாக்கி மூலம் சுட்டுக்கொல்கின்றனர். மேலும் “ஷாகிப்” என்ற வார்த்தையை பயன்படுத்து கின்றனர். இந்த செயலுக்கு அமெரிக்க ராணுவ வீரர்களும் உடந்தையாக இருப்பதும் அதில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை பாகிஸ்தானில் பெரும்பாலான மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ விவகாரம் அமெரிக்க அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகளை அவர்கள் போட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.

ஆனால், இது போலியானது இதை தீவிரவாதிகள் போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினர் மூலம் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ விவகாரம் பாகிஸ்தான் மக்களிடையே பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல