ஞாயிறு, 3 அக்டோபர், 2010

நள்ளிரவு 12 மணி

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதீத உற்சாகத்தோடு கொண்டாடப்படுவது புத்தாண்டு தினம். புத்தாண்டு பிறப்பது பொதுவான விஷயம் என்றாலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர். புத்தாண்டை வித்தியாசமாகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் கொண்டாடும்.

கி.மு. 600ல் பண்டைய எகிப்தில் புத்தாண்டு வரும்போது குழந்தைகளை கூடையில் போட்டு பொது இடத்தில் வைத்து கடவுளை வழிபடுவார்கள். அந்த வழக்கம் இன்றும் அங்கு ஒரு சில இடங்களில் தொடர்கிறது.கொலம்பியாவில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் பொது இடங்களில் மக்கள் ஒன்றாக கூடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் மனித பொம்மை கொண்டுவரப்படுகிறது. அந்தப் பொம்மைக்குள் துன்ப நிகழ்வுகளுக்குக் காரணமான பொருட்கள் மற்றும் வெறுக்கும் விஷங்களை அடைத்து பழைய ஆடைகள் உடுத்தி தயாராக வைக்கின்றனர். 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அந்த பொம்மைகளை எரித்து விடுகின்றனர். பொம்மை எரியும் போது தங்களைச் சுற்றியுள்ள தீய சக்திகள் எரிந்து சாம்பலாவதாக அவர்கள் நம்புகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சரியாக 12 திராட்சைகளை உண்கின்றனர். இப்படிச் செய்வதால் புத்தாண்டில் வேளாண்மை செழிப்புறும் என்பது நம்பிக்கை.

ஜப்பானில் டிசம்பர் 31 ஆம் திகதி இரவில் மக்கள் தோஷிகோஷிசோபா என்ற நூடில்ஸ் உணவை உண்ணத் தொடங்குகின்றனர். நள்ளிரவு நெருங்கும் போது புத்த கோயிலில் 108 முறை மணியடிக்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டே உண்டால் ஆத்மா சுத்தமாகும் என்கின்றனர்.

வெனிசுலா, ஆஜென்டினா, பொலிவியா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் போது நள்ளிரவில் தங்கள் வீடுகளைச் சுற்றி பெட்டிகளை சுமந்து செல்கின்றனர். இப்படிச் செய்வதால் புத்தாண்டில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல