ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூவ்யின் மனைவி மரணம் (படங்கள் இணைப்பு)

 சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ ஹிஸின் லூங்ன் தாயாரான இவர் ஜூன் 24ம் திகதி சுகவீன முற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடுமையான நோய்வாய்ப்பட்ட திருமதி லீ குவான் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததாக அரசாங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமது தாயாரின் மரணச் செய்தி கேட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸின் லூங் வெளி நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக நாடுதிரும்பினார்.
ஆசியா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றறிருந்த முக் கிய கூட்டமொன்றில் பங்கேற்பத ற்காக பிரதமர் லீ ஹிஸினு லூங் வெளிநாடு சென்றிருந்தார். சிங்கப் பூரின் தந்தை என்றழைக்கப்படும் தற்போதைய பிரதமரின் தகப்பனான லீ குவான் யூ 87 சிங்கப்பூரின் தலை சிறந்த அரசியல் வாதியாவார். இவரின் புகழ் இவரது மகனையும் பிரதமராக்கியது 87
வயதான லீ குவான்யூ தற்போது வைத்திய சாலையிலுள்ளார்.
கணவன் மனைவி இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேளை மனைவி உயிரிழந்துள்ளார்.

இவரின் இறுதிக் கிரியைகள் இம்மாதம் 06ம் திகதி பூர்ண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

மே மாதம் 12ம் திகதியிலிருந்து சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் சிங்கப்பூரின் தந்தையுமான லீ குவான்யு வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது மனைவியின் மரணச் செய்தி கேட்டு பல அரசியல் தலைவர்கள் அனு தாபம் தெரிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல