செவ்வாய், 5 அக்டோபர், 2010

நாமே உலகின் வயதான இரட்டையர்கள்

உலகிலேயே வயது கூடிய இரட்டையர்கள் தாமே என பிரித்தானிய சகோதரிகளான எனா பக்ஹும் லில்லி மில் வார்ட்டும் உரிமை கோரியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பெல்ஜியத்தைச் சேர்ந்த கப்யல் வோட் றீமர், மே ஹென்ட்றிக்ஸ் சகோதரிகளை உலகின் வயதான இரட்டையர்கள் என குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்தி வெளி யிட்டதையடுத்தே பிரித்தானிய சகோதரிகள் இவ்வாறு உரிமை கோரியுள்ளனர். தமது வயது 100 வருடங்கள் 9 மாதங்கள் என எனாவும் லில் லியும் தெரிவிக்கின்றனர்.

மத்திய வேல்ஸிலுள்ள கார்த பிரேன்கியில் விவசாயி ஒருவருக்கு மகள்மார்களாக பிறந்த இவ்விருவரும் தமது வாழ்நாளில் 5 பிரித்தானிய அரசாட்சிகளையும் 20 பிரதமர்களின் ஆட்சியையும் கண்டுள்ளனர்.

எனாவும் லில்லியும் பென்சிலினைக் கண்டுபிடித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் இறந்த ஆண்டில் பிறந்தவர்களாவர்.

தற்போது கைம்பெண்களாக உள்ள இந்த இருவரும், சில மைல்கள் இடைவெளியில் வசித்து வருகின்றனர்.

இந்த இரட்டை சகோதரிகள் வாரம் ஒரு தடவை ஒன்றாக பஸ்ஸில் பொருட் கொள்வனவுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உலகின் வயதான இரட்டையர்களாக “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் பிரான்ஸைச் சேர்ந்த 98 வயதான இரட்டையர்கள் இடம்பிடித்துள்ளனர்.

“கின்னஸ்' உலக சாதனைப் புத்தகமானது சாதனைப் பதிவுகளுக்காக விண்ணப்பிப்பவர்களின் பதிவுகளை மட்டுமே உள்வாங்கிக் கொள்கின்றமை குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில் எனாவும் லில் லியும் கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் இடம்பெ றுவதற்காக விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல