பிறையன் மகள் சமந்தாவுடன்
தன்னை ஒரு ஆணாக உணரவில்லை எனத் தெரிவித்து பெண்ணாக மாறுவதற்கு பால்மாற்ற சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஒரு பெண்ணின் காதல் வலையில் விழுந்து அவரை தன்னின சேர்க்கை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ள விசித் திர சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.ஜஸ்மின், பிறையன் மற்றும் மகள் சமந்தா
மில்டன் கேனஸ் எனும் இடத்தைச் சேர்ந்த பிறையன் என்ற இந்த நபர், இள வயது முதல் கொண்டு பெண்களின் ஆடைகளை அணிவதை இரகசிய வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடை பெற்று சமந்தா என்ற பெண் குழந்தை பிறந்தது. எனினும் தன்னை ஒரு பெண்ணாக அலங்கரித்து மகிழும் பழக்கத்தை அவர் மாற்றவில்லை.பிறையன், மகள் சமந்தா சிறுவயதாக இருந்தபோது
தனது கணவனது விசித்திர வழக்கம் தொடர்பில் மனைவிக்கு தெரியாத போதும், கருத்து வேறு பாட்டால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில் பிறையன் தனது விநோத பழக்கத்தை அறிந்த பெண் ஒருவரை திரும ணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையும் நீடிக்காது விவாகரத்தில் முடிவடைந்தது.
இதனையடுத்து பிறையனின் பெண்ணாக மாறும் எண்ணம் தீவிரமடைந்தது.
அவர் 2005 ஆம் ஆண்டில் பால்மாற்ற ஹோர்மோன் சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை பெகி என மாற்றி வைத்துக் கொண்டார். அத்துடன் பெண்களுக்குரிய ஆடைகளையும் பகிரங்கமாக அணிய ஆரம்பித்தார்.
ஆனால் பெண்ணாக மாறியதால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.
இந்நிலையில் பெகிக்கு (47 வயது) இணையத்தளம் மூலம் ஜஸ்மின் (23 வயது) என்ற யுவதியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டது.
தற்போது பெகி ஹோர்மோன் சிகிச் சைக்கு மேலதிகமாக உடல் ரீதியான பாலி யல் மாற்ற அறுவைச் சிகிச்சை மேற் கொண்டு முழுமையாக பெண்ணாக மாறி எதிர்வரும் வருட ஆரம்பத்தில் ஜஸ்மினை ஓரினப்பால் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக