செவ்வாய், 5 அக்டோபர், 2010

பெற்ற குழந்தையை 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் கைது

பன்னிரண்டு தினங்களே வயது நிரம்பிய தனது ஆண் குழந்தையொன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விலை பேசி, இறுதியில் இருபதாயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் 3ம் திகதி மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பசறை மடுல்சீமை ரோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை விற்றுள்ளார். இப்பெண் தனது குழந்தையை சில தினங்களுக்கு முன்னர் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து பிரசவித்துள்ளார்.

அதனையடுத்து கடந்த 2ம் திகதி குறித்த ஆண் குழந்தையை பதுளை நகரில் வைத்து திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார்.

இக் குழந்தை குடும்பத்தில் நான்காவது குழந்தையாகும். குழந்தையை எடுத்துச் சென்றவர்களையோ குழந்தையையோ நேற்று மாலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இப் பெண் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ThinakaranImage Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல