ஞாயிறு, 10 அக்டோபர், 2010

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் சோனியா தனிப்பட்ட முறையில் கவனம்

இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதாக இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உறுதியளித்துள்ளார் என, தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி புதுச்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தனி விமானத்தில் சென்னை வந்தார்.

தமிழகம் வந்துள்ள சோனியா காந்தியிடம் தல்வர் கருணாநிதி மனு ஒன்றை அளித்தார். அதில், இலங்கை சென்று வந்த வெளியுற வுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அளித்துள்ள அறிக்கையின் மூலம் இலங்கை முள்வேலி காம்களில் 30 ஆயிரம் தமிழர்கள் துன்புற்று வருவது தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழர்கள் ஏற்கனவே வாழ்ந்த இடங்களில் அவர்களை குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத்தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு கிடைக்கவும், இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளிட்ட முதல்வர் கருணா நிதி, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகள் பற்றி சோனியா காந்தியிடம் ஆலோசித்தேன்.

அதுகுறித்து மனு ஒன்றையும் அவரிடம் அளித்துள்ளேன். இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்வு காண தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதாக சோனியா உறுதி அளித்துள்ளார். எனக் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல