சிறைச்சாலையில் உள்ள 120 பெண் கைதிகள் இந்த பெஷன் சோவில் பங்குப்பற்றியதாகவும் இவர்கள் பிளாஸ்டிக் பைகள், தும்பினாலான பைகளின் கைப்பிடிகள், உடைந்த பொருட்கள் போன்றவற்றினால் தயாரிக்கப்பட்ட பொருட்களாலான ஆடைகளை அணிந்த வண்ணம் மேடையில் ஒய்யாரநடை நடந்து பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு ஹெனான் மாகாணத்திலுள்ள ஷெங்ஸோ பெண்கள் சிறைச்சாலையில் நடைப்பெற்றது. மீள்சுத்திகரிப்பையும் காபனீரொட்சைட் வெளியேற்றத்தை குறைக்கும் வகையிலான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 மாலை நேர ஆடைகள், குப்பைகள் சேகரிக்கப்படும் கருப்பு நிற பைகளில் உருவாக்கப்பட்டிருந்தன.
திருமண வைபவத்திற்கு அணியும் சட்டைகள், கழிவறைக் கடதாசியினால் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடைகள் பலரது கண்களை ஈர்த்தன.
சிறைக்கைதிகளால் இனியும்கூட சாதித்துக்காட்ட முடியும் என்பதை காட்டுவதற்காக இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி கு சிகிங் குறிப்பிட்டுள்ளார்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக