ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நாயின் மூடிய கண்கள் திறக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)

பிரிட்டனில் ரோம்போர்டு பகுதியைச் சேர்ந்த லூயிஸ் வால்ஷ் என்பவர் மோலி எனப்பெயர் கொண்ட 12 மாத நாய்க்குட்டியை கடந்த மாதம் £500 க்கு வாங்கியுள்ளார்

இந்த நாய்க்குட்டிக்கு ஏற்பட்ட நோய் (entropion) ஒன்றின் காரணமாக பிறந்ததிலிருந்து அது பார்க்க முடியாமல் இருந்துள்ளது. அதன் இரு கண்களும் எப்பவும் மூடிய நிலையிலேயே இருந்தன.

தான் அந்த நாயை வாங்கியது முதல் அந்த நாய் நோயின் நிமித்தம் ஏற்பட்ட வலி காரணமாக அது கூடுதலாக நித்திரையிலேயே இருந்து வந்தது. அதன் நிமித்தம் அதற்குரிய வைத்தியங்களுக்காக கடந்த மாதம் முதல் இதுவரைக்கும் செலவழித்த மருத்துவச் செலவு மட்டும் £720 என்கிறார் வால்ஷ்.

இந்த நாய்க்குட்டிக்கு கண்களை சுற்றி அதிகப்படியான தசைகள் வளர்ந்து கண் பார்வையை மறைத்து விட்டதால் பார்க்க முடியாமல் திணறியுள்ளது, அதனை நிவர்த்தி செய்ய மோலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையின் போது கண்ணருகில் இருந்த அதிகப்படியான தோல் நீக்கப்பட்டதால் தற்போது இந்த நாய்க்கு பார்வை கிடைத்துள்ளது.

ரிச்சர்ட் மார்க்ஸ் என்ற விலங்கின மருத்துவர் அந்த நாயின் கண் அருகிலிருந்து பெரும் பகுதி தோலை அகற்றியுள்ளார். எஞ்சியிருந்த தோலை இழுத்து நாயின் பின் தலைப்பகுதியுடன் சேர்த்து வைத்து தைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு பின்னர் தற்போது தான் இந்த நாய்க்கு பார்வை கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள வால்ஷ், இந்த நாயின் முதல் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு தான் செலவு செய்த பணத்திற்காக இல்லையென்றும், இந்த நாய் இவ்வளவு வேதனையுடன் இருந்தபோது அதற்காக அவர் எது வித வைத்தியமும் செய்யாமல் அந்த நாயை துன்புறுத்தியதற்காகவே அவர் மீது வழக்கு தொடரவுள்ளதாக வால்ஷ் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல