ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மாட்டுக் கொட்டில் தான் காரணம்

கண்டி தெல்கொட பகுதியில் பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனமுற்றமைக்கு காரணம் பாடசாலைச் சூழலில் காணப்பட்ட மாட்டுக் கொட்டிலில் இருந்து வெளியான ஒருவகையான வாயுவே என சுகாதாரப் பிரிவினர் உறுதி செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இந்த பாடசாலை மாணவர்கள் 15 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மாணவர்கள் சுவாசித்த ஒருவகை வாயு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த மாட்டுக் கொட்டிலை பிரிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதன் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் வைத்தியர் சாந்தினி சமரசிங்க குறிப்பிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல