மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது. டொக்டரின் வீட்டில் இருந்து சுமார் ஆறு லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இருபதாயிரம் ரூபா பணம் என்பனவே திருடப்பட்டு இருந்தன.
இது சம்பந்தமாக வைத்தியர் மானிப்பாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த பெண்ணில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நகைகள் மற்றும் பணம் பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்டன.
அத்துடன் பொலிஸாரினால் குறித்தபெண் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக