செவ்வாய், 26 அக்டோபர், 2010

தனக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்காதலால் தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்! (படங்கள் இணைப்பு)

சென் வய் யி என்ற தைவான் நாட்டுப் பெண் தனது இளவயது முதல் தனக்கேற்ற ஜோடியை பல வழிகளிலும் தேடிக் கிடைக்காமையால் மனமுடைந்துபோன அவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்.

அடுத்தமாதம் தனது திருமண வரவேற்பை நடத்தவுள்ள சென் வய் யி தெரிவிக்கையில், 30 வயதான தனக்கு நல்ல வேலை, போதுமான வருமானம் இருந்தும் இதுவரை வாழ்க்கைத் துணை கிடைக்கவில்லையே. நான் என்ன செய்வது? என்று கூறும் இவர் தன் மீதுள்ள சமுதாய அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

தான் திருமண பந்தத்திற்கு எதிரானவர் இல்லை. ஆனால் திருமணம் மீதுள்ள சமுதாயத்தின் நீண்ட நாள் பார்வையை மாற்றவே இவ்வாறு செய்வதாகவும், தன்னைப் போல் இன்னும் நிறைய பெண்கள் திருமணமாகாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 6 ந்திகதி இவரது தனி திருமணம் நடக்கவிருக்கின்றது. அதன் பின்னர் தனிமையான தேன் நிலவிற்காக இவர் ஒஸ்ரேலியா செல்கிறார்.

ஒரு ஆணோடுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய இவரின் தாயார் பின்னர் தனது தனித்த திருமணத்திற்குச் சம்மதம் வழங்கி விட்டதாகவும் சென் கூறினார். மேலும் ஒரு நல்ல மணமகன் கிடைக்கும் பட்சத்தில் அவரை மீண்டும் திருமணம் முடிக்க தான் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல