புதன், 3 நவம்பர், 2010

ஒபாமாவுடன் இந்தியாவரும் 'கெடிலாக் வன்' பிரத்தியேக கார் (பட இணைப்பு)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கவுள்ளார்.

ஒபாமாவின் விஜயத்தையொட்டி அவருக்கான பிரத்தியேக காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அதிநவீன 'கெடிலாக் வன்' எனப்படும் இக்காரானது சுமார் 7000 கிலோகிராம் நிறை கொண்டது.


இக்காரானது இரசாயன, உயிரியல் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது.

அமெரிக்காவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த கார் இது.

அணுகுண்டு போட உத்தரவிடலாம்

 
காரின் மேற்புறத்தில் ராணுவ தரத்திலான பாதுகாப்பு ஸ்டீல் கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, துப்பாக்கிக் குண்டுகளும் காரை துளைக்காது. கார் ஜன்னல் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 5 அங்குலம் தடிமன் கொண்டவை. மேலும், உடைக்க முடியாத தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த பிரபஞ்சத்திலேயே உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரே சூப்பர் வாகனம், அமெரிக்க அதிபரின் கார் என்றால் மிகையாகாது.

அந்த காருக்குள் இருந்தபடியே அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை, துணை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஆகியோரை எந்த நேரமும் ஒபாமா தொடர்பு கொள்ளும் வகையில் அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, காருக்குள் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவிடும் வகையில் `சிறப்பு பட்டன்' (விசை) காருக்குள் உள்ளது.

40 விமானங்கள், 6 கார்கள்

 
இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா வருவதால் இந்த காரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி நகரத் தெருக்களில் இது வலம் வரும். இது தவிர, ஒபாமா வருகையை முன்னிட்டு அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் வருகின்றன. அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குள் அதிபர் ஒபாமா செல்லும் ஒவ்வொரு அங்குல இடத்தையும் அந்த உளவுப் பிரிவினர் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். ஒபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக 3 கடற்படை ஹெலிகாப்டர்களும் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒபாமா பாதுகாப்பு பணிகளில் 30 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.



மாநிலங்களுக்கு எச்சரிக்கை

 
இந்தியாவில் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை உஷார் படுத்தியுள்ளது. எனவே, மராட்டியம், டெல்லி மற்றும் காஷ்மீர் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளி விழாக்காலம் என்பதால் டெல்லியில் உள்ள முக்கிய சந்தைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, ஒபாமா வருகையும் இருப்பதால் கூடுதலாக 10 சந்தைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் ïனியன் பிரதேச அரசுகளுக்கும் தீவிரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல