நியூஸிலாந்தின் தென்பசுபிக் பிராந்திய தீவான தொகேலாயுவைச் சேர்ந்த இந்த மூவரும் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி அதாபு அடோல் எனும் இடத்திற்கு அருகே சிறிய அலுமினிய படகில் சென்ற வேளை காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிறுவர்களில் இருவர் 16 வயதுடையவர்களாவர். ஒருவர் 14 வயதுடையவராவார்.
காணாமல்போன சிறுவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நியூஸிலாந்து விமானப்படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, சிறுவர்கள் மூவரும் இறந்து விட்டதாக நம்பப்பட்டது. தொடர்ந்து சிறுவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அவர்களது குடும்பத்தினரால் நடத்தப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை பிஜி தீவின் வட கிழக்கே இந்த மூன்று சிறுவர்களும் பிராந்திய மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூரிய வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை தவிர அவர்களது உடல் ஆரோக்கியம் நல்லநிலையில் உள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.
சிறிது பானத்தைத் தவிர உணவு எதுவும் உள்ளெடுக்காமல் மேற்படி சிறுவர் கள் இத்தனை காலம் உயிர் பிழைத்திருந்தமை அதிசய சம்பவமாக கருதப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக