வியாழன், 23 டிசம்பர், 2010

ஐ.நா நிபுணர் குழு இலங்கை மண்ணில் காலடிவைத்தால் நாடுதிரும்ப முடியாது

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினர் இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்கக் கூடாது. மீறி வைத்தால் அவர்கள் நாடுதிரும்ப மாட்டார்கள் என எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பான் கீ மூனுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்ததாவது: இலங்கையில் போர்க் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை யுத்தத்தின்போது புலிப் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டனர்.

தற்போது உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடன் ஒரு அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் நடை பெறாத சம்பவங்களுக்கு விசார ணைக் குழு அமைத்து அநாவசிய மான பிரச்சினைகளை தோற்றுவிக்க ஐ.நா. முற்படுகின்றது. பான் கீ மூனின் நிபுணர் குழு எக் காரணம் கொண்டும் இலங்கைக்கு வரக்கூடாது.

அவர்களது வருகையைத் தடுத்து நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள மக்களை தொடரணிப்படுத்துவோம். இது தொடர்பாக பல முக்கிய தீர்மானங்களும் அறிவிப்புக்களும் இன்று வெளியிடப்படும்.

இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஐ.நா.குழு இலங்கை வருவது எமக்கு உதவி ஒத்தாசைகள் வழங்க அல்ல எமது இராணுவத்தை பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிடப்படுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

உள்நாட்டில் பல சூத்திரதாரிகள் நாட்டுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் அவர்களை காலதாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

புலிகளின் தலைமைத்துவங்களை பாதுகாக்க முடியாமல் போன ஐ.நா.உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தற்போது ஏதோ ஒரு வகையில் இலங்கையை சிறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இதனை தோல்வியடைய செய்ய வேண்டும்.எனவே பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு வர அனுமதிக்கக் கூடாது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல