வியாழன், 23 டிசம்பர், 2010

யாழில் இளம்பெண் மர்ம மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு பின்னர் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள இளம்பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்திருக்கின்றது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமல் போனதாகத் தெரிவிக்கபட்ட வடமராட்சி புலோலி தெற்கைச் சேர்ந்த அரியநாயகம் துளசி என்ற 19 வயது இளம்பெண்ணே இம்மாதம் 10ஆம் திகதி இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரது சடலம் பருத்தித்துறை நீதவானின் உத்தரவுக்கமைய மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சடலத்தின் தலையில் கத்திக்குத்துக் காயமும், இரண்டு உள்ளங்கைகளிலும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உடலின் பல பகுதிகளில் சிறாய்ப்புக் காயங்களும் காணப்பட்டதாக மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் இவர் இறப்பதற்கு முன்னர் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், இறந்த பின்பு அல்லது குற்றுயிராக கிணற்றினுள்ளே போடப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகப் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பிபிசி செய்தி சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல