வியாழன், 23 டிசம்பர், 2010

மகளை நரபலி கொடுத்து பரிகாரம் தேடினார் தாய்

இங்கிலாந்தில் வசிக்கும் சோமாலியாவை சேர்ந்த பெண் ஷானா பரூக்கி. வயது 35. லண்டனில் உள்ள தனது வீட்டில் 4 வயது மகளை திடீரென கத்தியால் குத்திக் கொன்றார். உடலைக் கிழித்து இதயம், நுரையீரல், குடல் என முக்கிய பாகங்களை வெளியே எடுத்த ஷானா, வீட்டை சுற்றி அவற்றை வீசினார். பிறகு, சடலத்தின் அருகே அமர்ந்து மத ரீதியான வழிபாட்டில் இறங்கினார்.

அவர் கத்தியுடன் ஒருமுறை வெளியே வந்ததை பார்த்த பாய் பிரண்ட், போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சோதனை நடத்தியதில் மத ரீதியான பரிகாரமாக கருதி, குழந்தையை கொன்று உடல் பாகங்களை வீட்டை சுற்றி வீசியது தெரிய வந்தது. ஷானாவை போலீசார் கைது செய்தனர். அவரது மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல