வியாழன், 23 டிசம்பர், 2010

சவுதி அரேபிய நரக சிறையிலிருந்து மீண்ட இந்திய பெண் டாக்டர்

சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர் ஆஷிஷ் சாவ்லா. இவர் கடந்த ஜனவரி மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். மதம் மாறிய மறுநாள் இவர் மர்மமான முறையில் தூக்கத்திலேயே இறந்து கிடந்தார்.

இவர் மனைவி ஷாலினி ஒரு டாக்டர். கணவர் மதம் மாறியது பிடிக்காமல் ஷாலினி தான் கணவருக்கு விஷம் வைத்து கொன்று விட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறந்து 34 நாளேயான அவரது மகனும் அவருடன் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

2-வது முறையாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவர் உடலில் விஷம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததை தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று கோர்ட்டு அறிவித்தது. இதனால் 10 மாதம் சிறைவாசம் அனுபவித்த அவர் விடுதலை செய்யப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல