வியாழன், 23 டிசம்பர், 2010

எம்ஜிஆர் - நினைவு நாள்

எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார்.

திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.

நல்ல குணங்கள் நிறைந்த கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். அவர் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதி கல்கி இதழில் தொடராக வெளிவந்த கயல்விழி என்னும் புதினத்தின் அடிப்படையிலானது இது.

தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். இவற்றில் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கியிருந்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

* ராஜ ராஜன்
* ராஜகுமாரி
* மன்னாதி மன்னன்
* மந்திரி குமாரி
* திருடாதே
* மலைக்கள்ளன்
* அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
* மதுரை வீரன்
* புதுமைப்பித்தன்
* ஆயிரத்தில் ஒருவன்
* அன்பே வா
* எங்க வீட்டுப் பிள்ளை
* நாடோடி மன்னன்
* படகோட்டி
* ரிக்ஷாக்காரன்
* உலகம் சுற்றும் வாலிபன்
* ராமன் தேடிய சீதை
* அடிமைப்பெண்


சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்

1. பாரத் விருது - இந்திய அரசு
2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
4. பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.


நினைவிடம்

தமிழ்நாடு அரசு ம.கோ.இராமச்சந்திரன் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல