சனி, 1 ஜனவரி, 2011

இரு தரப்பினருக்கிடையிலான தகராறு கைகலப்பில் முடிவுற்றது

வரணியில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு பின்னர் கைகலப்பாக மாறி அடிதடி, கல் வீச்சில் முடிவுற்றது. வரணி வடக்கு கறுக்காய் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கொடுக்கல் – வாங்கல் தொடர்பான தகராறு வலுப்பெற்று ஒரு தரப்பினரை எதிர்த் தரப்பினர் மறைந்திருந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி குடும்பத்தர் ஒருவரின் கையையும் கல்லினால் குறிவைத்து தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் வரணி வடக்கு கறுக்காயைச் சேர்ந்த கோகிலா தவராசா (வயது 46) என்ற குடும்பஸ்தர் பலத்த அடிகாயங்களுடனும் கைமுறிந்த நிலையிலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை ஊடாக கொடிகாமம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவரைத் தாக்கிய நபர் ஒருவர் பல வழக்குகளில் கொடிகாம பொலிஸாரினால் தேடப்படும் சந்தேகநபர் என்றும் தெரியவந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல