சனி, 1 ஜனவரி, 2011

கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட தாயும் மகளும் படுகாயமடைந்தனர்

தனிமையில் வாழ்ந்து வந்த தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் ஊர்காவற்றுறை தம்பாட்டிமனோன்மணி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.நடராசா சிந்தாமணி (78 வயது). இவரது மகள் இ.ராஜலக்ஷ்மி (45 வயது) ஆகிய இரு பெண்களே வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்டவர்களாவர்.

இனம்தெரியாத சிலர் இவர்களின் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் இவர்களை வெட்டியதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் படுகாயங்களுடன் வீட்டின் முன்பாகவுள்ள வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.அந்த வீட்டார் கடற்படையினருக்குத் தகவல் கொடுக்கவே ஊர்காவற்றுறை பொலிஸார் அங்கு வந்து இருவரையும் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல