ஆனாலும், அதுவே இவரது வாழ்வின் கடைசி பயணாமா அமைந்தது. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, பெப்ரவரி 1,2003 விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.
இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழிலதிபருமான திரு.ஜெ.ஆர்.டி.டாடாவைப் பார்த்து அவருக்கு பறப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் துவங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.
அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.
பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா V/STOL இல் CFD ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க சாவ்லா தகுதிச்சான்றிதழ் பெற்றதோடு அவர், ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்றிருந்தார். FCC KD5ESI என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.
கல்பனா 1983 ஆம் ஆண்டு ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானம் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை மணம் முடித்தார். அதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்கரானார். ஹாரிசன் ஆகாய விமான ஓட்டும் கலையைப் பற்றி எழுதும் ஒரு வல்லுனரும் ஆவார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக