ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இளவரசர் சார்லஸ் இவரிடம் ஜொள்ளுவிட்டாராம்

மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியைப் பார்த்து ஜொள்ளு விட்டபடி, எனக்காக தனியாக கேட்வாக் நடந்து காட்ட முடியுமா என்று கேட்டுள்ளார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ். இதை அந்த அழகியே தனது சுயசரிதை நூலில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தது 1999ம் ஆண்டு. ஒரு பார்ட்டியின்போதுதான் இது நடந்ததாம். அதுவும் சார்லஸின் 2வது காதல் மனைவியான கமீலா பார்க்கர் பவுஸ் முன்பே நடந்ததாம்.

அந்த அழகி எழுதிய தனது சுயசரிதை நூலில் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் இது வெளியிடப்படவுள்ளது.

அந்த நூலில், 42 வயதாகும் தாஸா டி வாஸ்கான்செலாஸ் (சார்லஸுக்கு 62) எழுதியுள்ளதாவது...

அந்த பார்ட்டியின்போது நான் மிகவும் கவர்ச்சிகரமான உடையில் பங்கேற்றேன். அப்போது என்னைப் பார்த்த சார்லஸ், கவர்ச்சிகரமான புன்னகையுடன் என்னிடம் நெருங்கி, மிகவும் துணிச்சலோடு, நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்றார். பின்னர் என் மீது தனது பார்வையை ஓட விட்டார்.

முதலில் எனது கழுத்தின் மீது அவரது பார்வை போனது. பின்னர் அப்படியே கீழேயும் போனது. எனது அழகிய வளைவுகளையும் அவர் தைரியமாக ரசித்தார். பின்னர், எனக்காக ஒரு தனிப்பட்ட கேட்வாக் நிகழ்ச்சியை செய்ய முடியுமா. அதுகுறித்து பரிசீலிக்கலாமே என்றும் கேட்டார்.

என்னைச் சுற்றிலும் நின்றிருந்தவர்கள் எங்களையே வெறித்துப் பார்த்தனர். ஆனால் நான் சார்லஸின் கோரிக்கையை நிராகரித்து விட்டேன். அவர் மீது கமீலா மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதை நான் அறிவேன்.

நான் சார்லஸை பலமுறை சந்தித்துள்ளேன். முதலில் செல்டன்ஹாமில் நடந்த போலோ போட்டியின்போது சந்தித்தேன். இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் காதலியான ஆரிலியா ஸ்டீபன்சன் மூலமாகத்தான் சார்லஸை முதலில் சந்தித்தேன்.

அதன் பிறகு பலமுறை சந்தித்துள்ளேன். ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத அரண்மனையில் நடந்த தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்கும் நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

எனக்கு சார்லஸ் நல்ல நண்பர். அதேபோல, பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் மனைவி கார்லா ப்ரூனியும் நெருங்கிய தோழிதான்.

எனக்கும் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் இடையே உறவு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் அந்த அழகி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல