ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பெற்ற குழந்தையை மலசலகூட குழிக்குள் தவறுதலாக மூழ்கடித்து கொன்ற தாய்

தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை தவறுதலாக மலசலகூடத்தில் மூழ்கடித்து தாயொருவர் கொன்ற சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜலான் கிளாங்லமா பிராந்தியத்திலுள்ள தமான் ஸெரி சென்தோஸா நகரைச் சேர்ந்த மேற்படி திருமணமாகாத 28 வயது பெண், அதிகளவு குருதி வெளியேற்றத்திற்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சற்றுமுன் குழந்தையொன்று பிறந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதை அவதானித்து விசாரிக்கவுமே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

7 மாத கர்ப்பிணியான மேற்படி யுவதி மலசல கூடத்திலிருந்த போது, குறைமாதத்தில் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிரசவமாயிருப்பதை உணராது மலசலகூடத்தின் நீர் பாய்ச்சும் கருவியை இயக்கியதாகவும், இதன் போது குழந்தை நீரால் மலசலகூட குழிக்குள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மேற்படி பெண் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல