திங்கள், 17 ஜனவரி, 2011

சவுதியில் சித்திரவதைகளை எதிர்நோக்கிய மற்றுமொரு பெண் நாடு திரும்பினார்!

சவுதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி நிர்க்கதியான நிலையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் குறித்த செய்தி அண்மையில் வெளியாகியது. நாலியாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான அப்துல் முனாஜ் சனுன் உம்மா என்ற பெண்ணே இந்த சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளினால் ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வேலைவாய்ப்பிற்காக அவர் சவ10தி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.

அங்கு சென்ற அவரை வீட்டு எஜமானிகள் இரண்டு மாதங்கள் வரை குடும்ப உறுப்பினர் போல் குறித்த பெண்ணைக் கவனித்துள்ளனர். இரண்டு மாத சம்பளத்தையும் அவர் தனது கணவருக்கு அங்கிருந்து அனுப்பியிருந்தார். எனினும் இரண்டு மாதங்களின்

பின்னர் அவர் குறித்த எந்தத் தகவல்களையும் கிடைக்கவில்லை.
அப்போது அவர் சவுதியில் உள்ள எஜமானர்களினால் இருளான அறையொன்றுக்குள் சிறை வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியிருந்ததுடன் தலைமுடியையும் கத்தரித்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்படும் அளவிற்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அவர் கடந்த 7ம் திகதி இலங்கை திரும்பியதுடன் தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சவுதி எஜமானர்களின் கைக்குழந்தை சனுன் உம்மாவின் கையிலிருந்து கீழே விழுந்ததன் காரணமாக அவர் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நாவுல காவல்துறையின் பொறுப்பதிகாரி சிறிலால் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல