திங்கள், 17 ஜனவரி, 2011

யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான சிறிபாலசுந்தரம் நினோஷா என்பவரே பாடுகாயமடைந்துள்ளார்.

இவர் வீட்டு வாசலில் முன்னால் நின்ற போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவிவருவதுடன் குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல