திங்கள், 17 ஜனவரி, 2011

புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில வைக்குமாறு உத்தரவு!

புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படடுள்ளார்.

தமிழினியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகளை நடத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல