இதனால் தென் ஆபிரிக்காவில் வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை மறுத்தது. மண்டேலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். எனவே, இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் அமைதியாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அந்த அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஷெலோ ஹட்டாய் வெளியிட்டுள்ளார். இந்த வதந்தி பரவ அந்த இணைய தளத்தை பயன்படுத்தியவர் தான் காரணம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த இணைய தளம் கடந்த காலங்களில் பல பிரபலங்கள் மரணம் அடைந்ததாக செய்திகளை வெளியிட்டு பின்னர் அது நகைச்சுவை என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக